அட.. தெறி பேபி இப்போ நல்லா வளர்ந்துட்டாங்களே..! மீனாவுடன் க்யூட் வீடியோ வெளியிட்ட நைனிகா.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை மீனா தனது மகளுடன் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கியவர் மீனா. ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர், தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இவரின் மகள் நைனிகா. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் இவர் விஜய்யின் மகளாக நடித்து அசத்தினார்.
இந்நிலையில் மீனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தன் மகள் நைனிகாவுடன் இப்போது எடுத்து கொண்ட போட்டோவையும், கொரோனா பாதுகாப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸால் வீட்டில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள்தான் இதுவாம். 2016-ல் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய நைனிகாவின் இந்த புதிய வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Tags : Meena, Vijay, Baby Nainika, Theri