லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் ஆகியோர் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் எப்போது வெளியாகும்? என ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதையடுத்து தளபதி 65 படத்தில் விஜய்-கூட்டணி மீண்டும் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது மிகவும் ஹாட்டான தகவலை நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். விஜய், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து ஜில்லா, மெர்சல் படங்களிலும் காஜல், விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது காஜல் வெளியிட்ட வீடியோவில், ''எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தளபதி விஜய் தான், நாங்கள் கூடிய விரைவில் மீண்டும் ஒரு படத்தில் இணைவோம்,'' என்று தெரிவித்துள்ளார். இதனால் தற்போது விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இணைவதாக பேசிக்கொண்டிருக்கும் படத்தில் இவர் தான் ஹீரோயினாக நடிக்கிறாரோ? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
I love working with him , One of my favourite Co-star , Very Soon 😍 - @MsKajalAggarwal Instagram Live #KajalAggarwal #Master #Thalapathy65 May be Thuppakki 2😎 @Vijay65_Film pic.twitter.com/8A2oPmDOBu
— T F I (@itz_TFI) March 22, 2020