சிவகார்த்திகேயன் கொடுத்த க்யூட் ரியாக்‌ஷன்ஸ்... அப்படி என்னதான் சொன்னார் அதுல்யா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அதுல்யா, சிவகார்த்திகேயனுடன் இருந்த ஜாலியான தருணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் - அதுல்யாவின் க்யூட் ரியாக்‌ஷன் வீடியோ | actress athulya shares cute video with sivakarthikeyan.

தமிழ் சினிமாவில் தற்போது இளம் கதாநாயகியாக வலம் வருபவர் அதுல்யா ரவி. அண்மையில் இவர் நடித்த கேப்மாரி, நாடோடிகள்-2 உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. தனது படங்கள் மட்டுமின்றி, இவர் வெளியிடும் போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை இவர் வைத்துள்ளார்.

இந்நிலையில் அதுல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பிஹைன்ட்வுட்ஸ் நடத்திய நிகழ்ச்சியில் அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சிரித்து மகிழும் தருணத்தை அவர் வெளியிட்டுள்ளார். மேலும், 'கடவுளே.. இந்த கேன்டிட் மொமன்ட்ஸை எடுத்தது பிஹைன்ட்வுட்ஸ். அப்போது நான் என்ன சொன்னேன் என யோசித்து கொண்டிருக்கிறேன். அது எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும், அதற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்‌ஷன்ஸ் சூப்பர். அவருடைய தீவிர ரசிகை நான். அவர் மிகுந்த தன்னடக்கத்துடனும் அக்கறையுடனும் இருப்பது பெருமையாக உள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor