'இந்த பாட்டை அடிச்சுக்க இன்னொரு பாட்டு இருக்கா.?' - நடிகர் விவேக் ஏன் இப்படி சொல்கிறார்.?
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விவேக் பாடகி ஜானகியின் பாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக கலக்கி வருபவர் விவேக். விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் இவர் காமெடியில் அசத்தியுள்ளார். இவர் அண்மையில் நடித்த தாராள பிரபு படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து இவர் இந்தியன் - 2 படத்தில் படித்து வருகிறார்.
இந்நிலையில் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சூப்பர் பதிவை வெளியிட்டுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் பாடகி ஜானகிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், ஜானகி பாடிய 'சிங்காரவேலனே நீ வா' எனும் பாடலை குறிப்பிட்டு, இந்த பாடலுக்கு இணையான வேறு பாடல் இருக்கிறதா, கந்தர்வ கான குரலிசை' என பெருமையாக பதிவிட்டுள்ளார்.
Till today is there a song comparable to “ singaravelane Nee vaa”? Peerless melodious voice!! கந்தர்வ கான குரலிசை! எஸ்.ஜானகி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் pic.twitter.com/fo4qIYuR6I
— Vivekh actor (@Actor_Vivek) April 23, 2020