Video : எப்பவுமே சிரிக்க வச்ச வடிவேலு இப்போ அழ வச்சுட்டாரு - கண்ணீர் மல்க அவர் பேசிய வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனாவை எதிர்கொள்ளக 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய தேவை தவிர மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இந்த பிரச்சனையின் தீவிர தன்மை புரியாமல் ஒரு சில இடங்களில் மக்கள் வழக்கம் போல் வெளியில் வர அவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பும் நிகழ்வுகளும் அரங்கேறிவருகிறது. இந்நிலையில் பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம் குறித்து எடுத்துரைத்து மக்கள் வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுவருகிறார்கள்.
அதன் ஒருபகுதியாக நடிகர் வடிவேலு, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''மன வேதனையுடன் துக்கத்துடனும் கேட்டுக்கிறேன். தயவுசெய்து அரசு சொல்வதைக் கேளுங்க. வீட்டிலேயே இருங்க.
மருத்துவ உலகமே மிரண்டு, தன் உயிரைப் பணயம் வைத்து எல்லோரையும் காப்பாத்திட்டு இருக்காங்க. அவர்களுக்கு நாம ஒத்துழைப்பு கொடுக்கணும். காவல்துறை அதிகாரிகள் தயவு செய்து வெளியில் வராதீங்கனு கெஞ்சி கேட்கிறாங்க..
மற்றவர்களுக்காக இல்லாட்டியும் நம்ம சந்ததிகளுக்காக, நம்ம புள்ள குட்டிகளின் உயிரை காப்பதற்காக நாம வீட்டில் இருக்கணும். தயவு செய்து யாரும் வெளியில் போகாதீர்கள். அசால்ட்டா இருக்காதீங்க, ரொம்ப பயங்கரமா இருக்கு'' என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
நம்ம சந்ததிகளுக்காக, நம்ம வம்சாவழிக்காக எல்லோரும் வீட்டுலயே இருங்க 🙏 pic.twitter.com/I6wMMyl57W
— Actor Vadivelu (@VadiveluOffl) March 26, 2020