www.garudabazaar.com

அடேங்கப்பா.!! - நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவரது ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக அவரது ரசிகர்கள் ஒரு பிரமாண்டமான பரிசை கொடுத்துள்ளனர். 

நடிகர் சூர்யாவுக்காக ரசிகர்கள் செய்த பிரமாண்டம் | Actor Suriya's fans Celebrates his Birthday in Large Manner

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சம்மருக்கு வெளியாகவிருந்த சூரரைப் போற்று, லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள்தான். தங்களது அன்பை வெளிபடுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளை செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர்.நடிப்பிலும், அறச்செயலிலும் முதன்மையாக இருந்து வரும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிர 23 ஜூலை அன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

அவரது பிறந்த நாளை உலகமுழுவதும் தெரியப்படுத்த அவரது ரசிகர்கள் விரும்பினர். அதற்காக முதன் முறையாக இந்தியாவில் பிரபலங்களாக விளங்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள்,  இசையமைப்பாளர்கள்,  ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என 115  பிரபலங்களை ரசிகர்கள் தொடர்பு கொண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை (CDP) அவரவர்களின் சமூக வலைதளத்தில் வெளியிடவைத்து உலகமே அறியும் வகையில் பிரம்மாண்டப் படுத்தியுள்ளனர். 

சமூக வலைதளம் மூலமாக #SuriyaBirthdayFestCDP என்ற hashtag 24 மணி நேரத்திற்குள்ளாக 7 மில்லியனுக்கும் (70 லட்சம்) அதிகமாக பகிரப்பட்ட  இந்திய நடிகரின் பிறந்தநாள் போஸ்டர் (CDP) இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யாவுக்காக ரசிகர்கள் செய்த பிரமாண்டம் | Actor Suriya's fans Celebrates his Birthday in Large Manner

People looking for online information on Soorarai Pottru, Suriya, Suriya Birthday Common DP, Suriya fans will find this news story useful.