THALAPATHY 66: விஜய் நடிக்கும் 66-வது படத்தின் ஷூட்டிங்.. நடிகர் ஷாம் வெளியிட்ட செம BTS போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார்.

Actor Shaam Shared Thalapathy 66 vijay movie BTS

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actor Shaam Shared Thalapathy 66 vijay movie BTS

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக சரத்குமார், ஷாம் இணைந்து நடிக்க உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐத்ராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் ஷாம் இணைந்துள்ளார். இதனை ஷாம், இன்ஸ்டாகிராமில் படத்தின் BTS போட்டோவை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Actor Shaam Shared Thalapathy 66 vijay movie BTS

இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் இணைந்துள்ளார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வமசியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார். இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

Actor Shaam Shared Thalapathy 66 vijay movie BTS

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

THALAPATHY 66: விஜய் நடிக்கும் 66-வது படத்தின் ஷூட்டிங்.. நடிகர் ஷாம் வெளியிட்ட செம BTS போட்டோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Shaam Shared Thalapathy 66 vijay movie BTS

People looking for online information on Rashmika Mandana, Shaam, Thalapathy 66, Vijay will find this news story useful.