VIDEO : டிக்டாக்கில் மாஸ்டர் பாடலுக்கு 'மரண' ஆட்டம் போட்ட ரோபோ ஷங்கர், பாண்டியம்மாள்...!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலை செய்பவர்களும். வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். அநாவசியமாக யாரும் வெளியில் வருவது இல்லை.

டிக் டாக்கில் மாஸ்டர் பாடலுக்கு 'மரண' ஆட்டம் போட்ட ரோபோ ஷங்கர், பாண்டியம்மாள் Actor Robo Shankar And Daughter makes an a

இப்படி ஒரு பக்கம் மன அழுத்தம் இருந்தாலும், பிரபலங்கள் மற்றும் ஊடகங்கள் மக்களை மன அழுத்தத்தில் இருந்து விலகி இருக்க பெரும் முயற்சி செய்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது மகள் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளனர். மாஸ்டர் படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு இந்த அப்பா மகள் ஆடியிருக்கும் வீடியோ, பெரிய வைரல் ஆகி வருகிறது. அவரது மகள் இந்திரஜா சமீபத்தில் நடிகர் விஜய்யின் 'பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor