www.garudabazaar.com

நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி.! - கமல் உடனே செய்த உதவி என்ன தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம்- கமல் செய்த உதவி | Actor Kamal Hassan Helps Biggboss Actor Ponnambalam for his Hospital Treatment

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக கலக்கியவர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்களில் தனது வில்லத்தனத்தால் ரசிகர்களை கவர்ந்தார் பொன்னம்பலம். இவர் அண்மையில் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு அசத்தினார். 

இந்நிலையில் நடிகர் பொன்னம்பலம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக பிரச்சனை காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் கமல் பொன்னம்பலத்தின் மருத்துவ செலவுகளை முழுமையாக ஏற்று கொண்டுள்ளார். மேலும் பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவையும் கமலே ஏற்றுகொண்டுள்ளார். இதையடுத்து கமல் செய்த உதவியை பாராட்டுவதுடன், பொன்னம்பலம் விரைவில் உடல்நலம் தேறி வர வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம்- கமல் செய்த உதவி | Actor Kamal Hassan Helps Biggboss Actor Ponnambalam for his Hospital Treatment

People looking for online information on Hospital, Kamal Haasan, Ponnambalam will find this news story useful.