www.garudabazaar.com

VIDEO: Big Boss கவின் நடிக்கும் Lift படத்தின் த்ரில்லான டிரெய்லர்! எப்ப்டி இருக்கு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெறுவதற்கு முன்பு, நடிகர் கவின் 'சத்ரியன்' மற்றும் 'நட்புனா என்னனு தெரியுமா' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

actor bigboss kavin lift movie trailer is released

நடிகர் கவின் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையன் கதாபாத்திரம் மூலம் புகழ் பெற்றார். தற்போது நடிகர் கவின் 'லிஃப்ட்' படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். கவினுக்கு ஜோடியாக, அமிர்தா ஐயர் நடித்துள்ளார். இப்படத்தை வினீத் வரபிரசாத் இயக்குகிறார். ஏகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் இந்தப்படம் தயாரிக்கப்படுகிறது. பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

actor bigboss kavin lift movie trailer is released

திரையரங்க வெளியீட்டுக்காக இந்த படம் தணிக்கை செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெறப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் ஒன்று முதல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (24.09.2021) இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

actor bigboss kavin lift movie trailer is released

டிரெய்லர் வெளியான முதல்லே ரசிகர்களின் வரவேற்பை பெற்று 4 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. டிரெய்லரில் ஒரு அலுவலக லிப்டில் ஹீரோ- ஹீரோயின் மாட்டிக்கொண்டு அவர்கள் படும் அவஸ்தையை பரபரப்பாக ரசிகர்களை திரில்லாக்கும் வகையில் இயக்குனர் கொடுத்துள்ளார்.

VIDEO: BIG BOSS கவின் நடிக்கும் LIFT படத்தின் த்ரில்லான டிரெய்லர்! எப்ப்டி இருக்கு தெரியுமா? வீடியோ

Tags : Kavin

தொடர்புடைய இணைப்புகள்

actor bigboss kavin lift movie trailer is released

People looking for online information on Kavin will find this news story useful.