ப்ரியா பவானி ஷங்கர் மிரட்டல் - எந்த டைரக்டர் இப்படி செய்வார்..! அதர்வா பட இயக்குநர் அட்டகாசம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 தோட்டக்கள் படத்தின் டைரக்டர் ஶ்ரீகனேஷுக்கு ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த மிரட்டலுக்கு அவர் செய்த வேலை ரசிகர்களை கவர்ந்துள்ளது.

8 தோட்டாக்கள் ஶ்ரீகனேஷின் மீம்ஸ்கள் | 8 thottakal sri ganesh memes for priya bavani shankar

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஶ்ரீகனேஷ். இவர் தற்போது அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.  யுவன்ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். குருதி ஆட்டம் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஃபேஸ்புக்கில் படத்தை பற்றி மீம்ஸ் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இயக்குநர் ஶ்ரீகனேஷ். இவர் தற்போது புதிய மீம் ஒன்றை பதிவிட்டு, ப்ரியா பவானி ஷங்கர் எனக்கொரு மீம்ஸ் பண்ணுங்க என மிரட்டியதாக  குறிப்பிட்டுள்ளார். பாஷா படத்தின் காட்சியை வைத்து, ப்ரியா பவானி ஷங்கருக்காக அவர் போட்ட மீம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இது மட்டுமன்றி மேலும் பல மீம்ஸ்களை ஶ்ரீகனேஷ் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

Entertainment sub editor