Breaking: எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கரின் 'மான்ஸ்டர்' Coincidence இதோ, அப்போ வெற்றி உறுதி...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து கடந்த வருடம் மே மாதம் வெளியான படம் 'மான்ஸ்டர்'. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

SJ Suryah and Priya Bhavani Shankar's Bommai to release on May 15

'மான்ஸ்டர்' படத்துக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவுடன் பிரியா பவானி சங்கர் பொம்மை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராதா மோகன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கடைசிநாள் ஷூட்டிங் இன்று (பிப்ரவரி 15) மகாபலிபுரத்தில் நடைபெற்றதாம். இந்த படத்தின் டப்பிங் ஏறக்குறைய முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வருகிற மே 15 வெளியாவதற்காக தயாராகிவருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

Entertainment sub editor