SHOCKING : கமல் ஹாசன் பரபரப்பு புகார்..."விசாரணை என்ற பெயரில், என்னை துன்புறுத்துகிறார்கள்.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் கமல் ஹாசன் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இதில் அவருடன் காஜல் அகர்வால் நடிக்கிறார் இந்நிலையில் கடந்த மாதம் 20-ம் தேதி, சென்னை நசரேத் பேட்டையில் நடந்த ஷூட்டிங்கின் போது ராட்ஷத கிரேன் அறுந்து விழுந்து, உதவி இயக்குநா் ஒருவர் மற்றும் இரண்டு திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்தச் செய்தி நாட்டையே உலுக்கியது.

இந்தியன் 2 விவகாரம் கம்ஹாஸன் பரபரப்பு புகார் Kamal Hassan Files An Shocking Case Against Indian 2 Crane Accident

பலியானவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி தரப்படும் சென்று கூறிய கமல், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்ய தயாரிப்பு நிறுவனம் ஆன லைக்கா நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார். இந்த சம்பவத்தினால் ஷங்கர் மற்றும் கமல் இருவரும் மிகவும் கலங்கி போயினர்.

இந்த வழக்கின் விசாரணை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி விபத்து நடந்த இடத்தில் இருந்த தொழிநுட்ப  பணியாளர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் சம்பவ இடத்தில் இருந்த இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் லைக்கா நிறுவனத்திடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிந்து வெளியே வந்த கமல்ஹாசன் "விபத்தில் அடிபடாமல் தப்பித்தவா்களின் நானும் ஒருவன். அதனால் நடந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை கூறுவது எனது கடமை. எங்கள் துறையில் இனி இதுபோன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க காவல்துறையின் ஆலோசனையும் நாங்கள் கேட்டுள்ளோம்" என்று கூறினார்.

இந்நிலையில் இன்று அவர் "விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில்,  தன்னை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தன்னை துன்புறுத்துகிறார்கள். நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் நடிகர் கமல்ஹாசன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

இரு தரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதி, நடிகர் கமல்ஹாசன் நாளை ஈவிபி பிலிம் சிட்டியில் விசாரணைக்கு நேரில் ஆஜராக அவசியமில்லை என்றும், புலன்விசாரணைக்கு பின்னர் தேவைப்படும் பட்சத்தில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என நடிகர் கமலுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.

Entertainment sub editor