இந்தியன்-2 விபத்து : கமிஷனர் ஆபீஸுக்கு வந்த கமல்... "மூன்று சகோதரர்களுக்காக..." - அடுத்த திட்டம்.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன்-2 விபத்துக்கு பிறகு நடிகர் கமல் கமிஷனர் ஆபீஸ் வந்துள்ளார். பிறகு அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

இந்தியன்-2 விபத்து பற்றி கமல் | kamal comes to commisioner office over shankar's indian-2 crane accident

கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2. ஷங்கர் இயக்கும் இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு நடந்த போது, க்ரேன் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று கமல் இதுகுறித்து பேச கமிஷனர் அலுவலகம் வந்தார். இதையடுத்து அவர் கூறியதாவது, 'நடந்த விபத்தில் அடிபடாமல் தப்பித்ததில் நானும் ஒருவன். இழந்த மூன்று சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக, நடந்த சம்பவங்களை காவல் துறையிடம் எனக்கு தெரிந்த அளவில் எடுத்து சொல்வதற்கும், எங்கள் துறையில் இதுபோன்ற விபத்துகள் இனி நடக்காமல் இருக்கவும் எடுத்த முதல் முயற்சியாக இந்த கலந்துரையாடலை கருதுகிறேன். நேற்று சினிமா துறையை சேர்ந்தவர்களுடன் என் அலுவலகத்தில் இதுகுறித்தி பேசினோம். இன்று காவல்துறையின் தரப்பில், இனி இதுபோல் நடக்காமல் இருக்க அவர்களின் பரிந்துரைகளையும் கேட்டோம், கூடிய விரைவில் சினிமா துறை சார்ந்தவர்களிடம் பேசவுள்ளோம்' என அவர் கூறியுள்ளார்.

இந்தியன்-2 விபத்து : கமிஷனர் ஆபீஸுக்கு வந்த கமல்... "மூன்று சகோதரர்களுக்காக..." - அடுத்த திட்டம்.? வீடியோ

Entertainment sub editor