ரெடியாகிறது சந்திரமுகி-2..! ஹீரோ மற்றும் டைரக்டர் யார் தெரியுமா.?! அதிகாரப்பூர்வ தகவல் இது.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இத்திரைப்படத்தில் ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். பேய் படமாக உருவான இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ''நண்பர்களே நான் ஒரு முக்கியமான அறிவிப்பை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். எனது அடுத்த படம் தலைவர் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். தலைவரின் அனுமதியுடன் இத்திரைப்படத்தில் நடிப்பது எனக்கு அதிர்ஷ்டம். இப்படத்தை பி.வாசு இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்'' என அவர் பதிவிட்டுள்ளார். லாரன்ஸிடம் இருந்து வந்த இந்த சர்ப்ரைஸ் அறிவிப்பு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
— Raghava Lawrence (@offl_Lawrence) April 9, 2020