Valimai BWE
www.garudabazaar.com

VALIMAI: வலிமை படத்தை திரையரங்குகளில் பார்க்க 10 காரணங்கள்! இவை தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வலிமை: நாளை வெளியாகும் வலிமை படத்தை திரையரங்குகளில் பார்க்க முக்கிய 10 காரணங்கள் இது தான். வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக வலிமை திகழ்கிறது.

10 reasons why we should watch Valimai in theatres

முதல் காரணம் - அஜித்குமார்

நடிகர் அஜித், தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களுக்கும், பேமிலி டிராமா படங்களுக்கும் பெயர் பெற்றவர். முன்னணி நடிகரான அஜித்தின் படங்களுக்கு இருக்கும் ரசிகர்களால் சினிமா வட்டாரங்களில் KING OF OPENING என அழைக்கப்படுபவர். இவர் படங்களின் முதல் நாள் வசூலுக்காகவே இந்த புனைப்பெயரை இவர் பெற்றார். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு நேர்கொண்ட பார்வை (2019) படத்துக்கு பிறகு வலிமை படம் திரைக்கு வர இருக்கிறது.

2-வது காரணம் - H. வினோத்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படங்களுக்கு பின் வலிமை படத்தை இயக்குகிறார். இவரின் முந்தைய படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றவை. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய 3 படங்கள் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பெற்றவை. எச். வினோத்தின் சொந்த கதை திரைக்கதையில் அஜித் நடிக்கும் முதல் திரைப்படம் வலிமை ஆகும்.

3-வது காரணம் - நிரவ் ஷா ISC

ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ISC இந்திய சினிமாவில் Most Wanted ஒளிப்பதிவாளர். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டெனட் படத்திலும் பணிபுரிந்து பெருமை சேர்த்தவர். நிரவ் ஷா ஏற்கனவே அஜித்துடன் கிரீடம் (ஒரு பாடல்), பில்லா, நேர்கொண்ட பார்வை படங்களில் பணியாற்றியவர். இதில் பில்லா படத்தின் ஒளிப்பதிவு இந்திய சினிமாவில் ஸ்டைலிஷ் படங்களுக்கு முன் உதாரணமாக திகழ்வது. இந்திய சினிமாவின் ஒளிப்பதிவை பில்லா படத்திற்கு முன், பில்லா படத்திற்கு பின் என இரண்டாக பிரிக்கும் அளவுக்கு பில்லா படத்தின் ஒளிப்பதிவு தாக்கம் இந்திய சினிமாவில் இருக்கும். வலிமை படத்திலும் வண்ண அமைப்புகள், 3 விதமான ASPECT RATIO, படப்பிடிப்பு ரிக் வகைகளில் புதுமையை புகுத்தி படமாக்கி உள்ளனர். 

10 reasons why we should watch Valimai in theatres

4-வது காரணம் - திலீப் சுப்பராயன்

சண்டைக்காட்சி இயக்குனர் திலீப் சுப்பராயன் ஏற்கனவே நடிகர் அஜித்துடன் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களில் பணியாற்றி உள்ளார். இந்த படங்களில் குறிப்பாக விஸ்வாசம் படத்தின் இண்டர்வெல் & டாய்லெட் சண்டைக்காட்சிகள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன. அதே போல் நேர்கொண்ட பார்வை படத்திலும் ப்ரீ இண்டெர்வெல் சண்டைக்காட்சியும் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. அதே போல் வலிமை படத்தின் ஸ்டண்ட் காட்சிகளின் தாக்கம் டிரெய்லர், ப்ரோமோ, மேக்கிங் வீடியோ ஆகியவற்றில் தெரிந்தது.

10 reasons why we should watch Valimai in theatres

5- வது காரணம் - ஆக்ஷன் திரில்லர் GENRE (வகைமை)

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் திரில்லர் படங்கள் மிகக்குறைவு, ஆக்ஷன் திரில்லருடன் இதர கமர்சியல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு GENRE கொஞ்சம் மாற்றப்பட்டு இருக்கும். தீரன் அதிகாரம் ஒன்று, கைதி போன்ற சில படங்கள் மட்டுமே ஆக்சன் த்ரில்லர் என்ற GENRE உள் அடங்குகின்றன. அந்த வகையில் INDIA's BIGGEST ACTION THRILLER என்ற அடைமொழியுடன் வலிமை படம் திரைக்கு வர உள்ளது. ஆக்ஷன் திரில்லர் விரும்பிகளுக்கு இது ஜாக்பாட் தான். 

6- வது காரணம் - யுவன் சங்கர் ராஜா & ஜிப்ரான்

அஜித் - யுவன் காம்போவிற்கு என தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த காம்போவில் ஜிப்ரானும் இணைந்தால் சொல்லவா வேண்டும். அதகளம் தான்!. தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பின் வினோத்துடன் ஜிப்ரான் வலிமை படத்தில் பணிபுரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

10 reasons why we should watch Valimai in theatres

7 - வது காரணம் - மேடயில் ராதாகிருஷ்ணன் ராஜகிருஷ்ணன்

வலிமை படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் சென்னை ஃபோர் பிரேம்ஸ் சவுண்ட் கம்பெனியில் சில நாட்களுக்கு முன் நடந்தன. இந்த சவுண்ட் மிக்ஸிங்குக்கு தேசிய விருது வென்ற ஆடியோகிராபர் மேடயில் ராதாகிருஷ்ணன் ராஜகிருஷ்ணன் பணிபுரிகிறார். ராஜகிருஷ்ணன் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றியவர். ரங்கஸ்தலம் (2018) திரைப்படத்திற்காக 2019 ஆம் ஆண்டில் சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்றவர். கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விருது, கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றவர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் மலையாளம் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

8- வது காரணம் - சவுண்ட் சிஸ்டம்

ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு எவ்வளவு மிக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒலிப்பதிவு (சவுண்ட்) . 24 கிராப்ட்களில் படத்தின் தரத்தை தீர்மாணிக்கும் முக்கிய பங்கு சவுண்ட்டிற்கு மட்டுமே உண்டு. ஆடியோகிராபர் மேடயில் ராதாகிருஷ்ணன் ராஜகிருஷ்ணன் வலிமை படத்திற்காக Dolby Atmos -ல் 11.1 சவுண்ட் சிஸ்டத்தில் ஒலியமைப்பு செய்துள்ளார். 

9- வது காரணம் -  போலீஸ் வேடத்தில் அஜித்

'வலிமை' படத்தில் அஜித்குமார் 'மக்கள் காவலர்' அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  ஆனால் அவர் போலீஸ் வேடத்தில் நடிப்பது இது முதல் முறை அல்ல. 'ஆஞ்சநேயா' (2003) ஏசிபி பரமகுரு, 'ஆரம்பம்' (2013) இல் அசோக்குமார் ஐபிஎஸ், 'மங்காத்தா' (2011) SI விநாயக் மகாதேவ், 'என்னை அறிந்தால்' (2015) டிசிபி சத்யதேவ் என 5வது முறையாக உன்னதமான போலீஸ் ரோலில் அஜித்குமார் 7 வருடங்களுக்குப் பிறகு நடிப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

10 reasons why we should watch Valimai in theatres

10 - வது காரணம் - போனி கபூர் - ஸ்ரீ தேவி

நடிகை ஸ்ரீதேவியின் நினைவு நாளான நாளை (24.02.2022) வலிமை படம் வெளியாவது படக்குழுவுக்கு எமோஷனலான ஒன்று. ஸ்ரீ தேவியின் இறுதி ஆசைகளில் ஒன்றான அஜித் படத்தை தயாரிப்பது என்ற ஆசை இரண்டாம் முறையாக நிறைவேறும் தருணம் அது. 

வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

10 reasons why we should watch Valimai in theatres

People looking for online information on Ajith Kumar, AK, வலிமை, H Vinoth, Valimai, Valimai FDFS, Valimai Review, Valimai Tickets will find this news story useful.