பிரபல திரைப்பட இயக்குநர் பாக்யராஜின் மனைவியும், நடிகையுமான பூர்ணிமா பாக்யராஜ் தனது மருமகளுடன் சேர்ந்து ஜாலியாக Behindwoods-க்கு பேட்டியளித்துள்ளார்.

இயக்குநர் பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியின் மகனும், நடிகருமான சாந்தனு, பிரபல் டிவி தொகுப்பாளினி கீர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து செல்லமாக உரையாடிக் கொள்வது வழக்கம்.
இந்நிலையில், நடிகை பூர்ணிமாவும், அவரது மருமகள் கீர்த்தியும் Behindwoods தளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், வழக்கமான மாமியார் மருமகள் போல் அல்லாமல் இருவரும் தோழிகள் போல ஜாலியாக பேசினர்.
அப்போது தனது மாமியார் குறித்து பேசிய கிகி, என் அம்மா வீட்டில் இருந்ததை வீட மாமியார் வீட்டில் சுதந்திரமாக இருப்பதாகவும், ரொம்பவும் வெகுளியான மாமியார் எனக்கு, எது சொன்னாலும் நம்பிடுவாங்க என சொன்னார்.
அதேபோல், பூர்ணிமாவும், நாங்கள் இருவரும் மாமியார் மருமகளாக இருந்ததில்லை, ஒரு தோழியை போலவும், அம்மா-பொண்ணு போலவும் தான் இருப்போம் என்றனர். மேலும், சாந்தனு பற்றி அம்மாவுக்கு அதிகம் தெரியுமா, மனைவிக்கு அதிகம் தெரியுமா என்பதை சோதிப்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு இருவருமே விட்டுக் கொடுக்காமல் ஜாலியாக விளையாடினர்.
மாமியார் VS மருமகள்: “என் மாமியாரை ஈஸியா ஏமாத்திரலாம்”-பூர்ணிமா & கிகி-யின் ஜாலி டைம் வீடியோ