பிக் பாஸ் பிரபலத்தின் அடுத்தப்படம் யாருடன் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

Bigg Boss Ganesh Venkatraman begins shoot for his next Telugu film

தமிழில் ‘உன்னை போல் ஒருவன்’, ‘அபியும் நானும்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த கணேஷ் வெங்கட்ராமன், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமானார்.

இறுதியாக மலையாளத்தில் வெளியான ‘மை ஸ்டோரி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்த கணேஷ், தற்போது தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே கடந்த 2012ல் வெளியான Damarukam என்ற திரைப்படத்தில் இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்த புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பினை கணேஷ் வெங்கட்ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.