Jango Others
www.garudabazaar.com

"யுவன் மங்காத்தா-ல Copy Paste பண்ணிட்டார்.. ஆனா மாநாடு-ல".. "மாட்டிவிடலங்க".. SJ சூர்யா கலகல பேச்சு! Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படம் உருவாகி வந்திருக்கிறது.

yuvan did copy paste in Mankatha Says SJ Suriya at maanaadu meet

இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இத்திரைப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், இப்படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் இப்பட விழாவில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “நான் தற்போது பொம்மை, கடமையை செய் படங்களில் முதன்மைக் கதாபாத்திரங்களில் பண்ணுகிறேன்.  அதில் பொம்மை படத்துக்கு யுவன் தான் பின்னணி இசை. அவரை கிங் ஆஃப் பேக்ரவுண்டு ஸ்கோர் என்று எப்பவுமே சொல்வோம்.

மங்காத்தாவுல கூட ஒரு தீம் போட்டுட்டு, அதையே படம் முழுவதும் காப்பி பேஸ்டு பண்ணியிருப்பார். ஆனால் மாநாடுல ஒவ்வொரு சீனுக்கும் புதுசு புதுசா பேக்ரவுண்டு ஸ்கோர் பண்ணியிருக்கார். இது கம்ப்ளையண்ட் இல்ல. எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே.

யாரையும் மாட்டி விடலங்க (விழுந்து சிரிக்கிறார்).” என எஸ்.ஜே.சூர்யா பேசிய கலகலப்பான பேச்சினை கேட்டு சிம்பு, யுவன் என அனைவருமே ஸ்போர்டிவாக சிரித்தனர். எஸ்.ஜே.சூர்யாவின் முழுமையான பேச்சை இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.

"யுவன் மங்காத்தா-ல COPY PASTE பண்ணிட்டார்.. ஆனா மாநாடு-ல".. "மாட்டிவிடலங்க".. SJ சூர்யா கலகல பேச்சு! VIDEO வீடியோ

மேலும் செய்திகள்

yuvan did copy paste in Mankatha Says SJ Suriya at maanaadu meet

People looking for online information on Maanaadu, Mankatha, Premgi Amaren, Silambarasan TR, Sj suryah, Yuvan Shankar Raja will find this news story useful.