Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

Justin Prabhakaran : இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு டும் டும் டும்..! நடிகர் வெளியிட்ட Photo

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஜஸ்டின் பிரபாகரன்.

young tamil music composer Justin Prabhakaran marriage viral pics

தொடக்கத்தில் பண்ணையாரும் பத்மினியும், ஒரு நாள் கூத்து, தொண்டன், உள்குத்து, மான்ஸ்டர், அடுத்த சாட்டை,  உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் பின்னர் டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.

இவருடைய இசையிலான மேற்கண்ட திரைப்படங்களில் அமைந்த பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் இளசுகளுக்கு மத்தியிலும் கிராமப்புறவாசிகள் மத்தியிலும் ஹிட் அடித்தன.

young tamil music composer Justin Prabhakaran marriage viral pics

இவரது மெலோடி பாடல்களும் பலருக்கும் விருப்பமாக இருந்துவர, அண்மையில் பிரபாஸ்,  பூஜா ஹெக்டே நடிப்பிலான ராதே ஷ்யாம் திரைப்படத்தின் தமிழ் பதிப்புக்கு இசையமைத்திருந்தார். இடையில் பிரபல நெட்ஃபிளிக்ஸ் படமான மீனாக்‌ஷி சுந்தரேஸ்வரர் படத்திலும் இசையமைத்திருந்தார். இப்படி தமிழ் முதல் தென்னிந்தியா வரையிலும் இசையால் பிரபலம் ஆன ஜஸ்டின் பிரபாகரன் தொடர்ந்து பல முன்னணி திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

young tamil music composer Justin Prabhakaran marriage viral pics

இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகியுள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் வலம் வருகிறது, அதன்படி ஜஸ்டின் பிரபாகரன் - கரோலின் சூசன்னா தம்பதியரின் திருமணம் மதுரையில் உள்ள CSI - Holy Immanuel சர்ச்சில் சொந்தங்களும் நண்பர்களும் சூழ நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரை எல்லீஸ் நகரில் உள்ள MRC மஹாலில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, ஷாந்தனு, காளி வெங்கட் , கலையரசன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

young tamil music composer Justin Prabhakaran marriage viral pics

இதனை உறுதிப்படுத்தும் வகையில் நகைச்சுவை நடிகர், பால சரவணன், “எங்கள் கூட்டத்தில் இருந்த கடைசி முரட்டு சிங்கிளான ஜஸ்டின் பிரபாகரன் இன்று சங்க உறுப்பினர் ஆகிறார்” என்கிற கேப்ஷனுடன், ஜஸ்டின் பிரபாகரனின் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட புகைப்படத்தை தம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

young tamil music composer Justin Prabhakaran marriage viral pics

மேலும் நடிகர் பாலசரவணன், தமது இந்த பதிவில், “வாழ்த்துக்கள் நண்பா ஜஸ்டின் & கரோ” என்று மணமக்களை குறிப்பிட்டுள்ளார். 

இத்திருமணத்தில் இயக்குனர்கள் பா.ரஞ்சித், விக்ரம் சுகுமாரன், நாகராஜ், மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன், அதியன் ஆதிரை, ப்ராங்கிளின் ஜேக்கப், ஷான், பரத் கம்மா, விவேக் சோனி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் தயாரிப்பாளர் S.R.பிரபு, பின்னனி பாடகர் கிருஷ், பாடகர் அந்தோணிதாசன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

young tamil music composer Justin Prabhakaran marriage viral pics

திரையுலகத்தில் முன்னணி இளம் இசையமைப்பாளர்களுள் ஒருவராக திகழும் ஜஸ்டின் பிரபாகரனின் திருமணம் தொடர்பான இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

 

young tamil music composer Justin Prabhakaran marriage viral pics

People looking for online information on Justin prabhakaran, Justin Prabhakaran marriage, Justin Prabhakaran wedding will find this news story useful.