பிரபல இயக்குநர் மீது இளம் நடிகை #MeToo புகார்..! ''17 வயதில் பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளானேன்''.
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல இயக்குநர் மீது மாடல் நடிகை Me Too புகாரை முன் வைத்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த 2018-ஆம் ஆண்டு Me Too இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. இதில் பல்வேறு பெண்கள், தாங்கள் பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது குறித்து வெளிப்படையாக பேசினார்கள். இவ்விவகாரம் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை கிளப்பியது.
இந்நிலையில் தற்போது பிரபல மாடல் நடிகை டிம்பிள் பாவ்லா என்பவர் பிரபல இயக்குநர் மீது Me Too புகாரை முன் வைத்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி இயக்குநரான சஜித் கான் என்பவர் தன்னிடம், பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்டதாக அவர் பதிவிட்டுள்ளார். ஹவுஸ்புல் படத்தில் நடிக்க வைக்க, தனக்கு 17 வயது இருந்த போது, அவர் தவறாக நடந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். ''இத்தனை காலம் மௌனமாக இருந்துவிட்டேன், இன்னும் பேசாமல் இருப்பது தவறு என நினைப்பதால், இப்போது இதை சொல்கிறேன்'' என அவர் தெரிவித்துள்ளார். சஜித் கான் மீது இதற்கு முன்னரே சில நடிகைகள் Me Too குற்றசாட்டுகளை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Model Accuses Filmmaker Sajid Khan Of Sexual Misconduct
- Farah Khan's Statement On The Sexual Harassment Allegations Against Her Brother Sajid Khan
- Sajid Khan Quits As Director Of Housefull 4 Akshay Kumar
- Akshay Kumar To Play The Lead In Housefull 4 Directed By Sajid Khan
- Tamannah Gets Back To Back Proposals , Tamannah, Sajid Khan