இளம் நடிகை காவல்துறையில் தன்னை கற்பழித்துவிட்டதாக புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

பெங்காலி சீரியல் நடிகையான 26 வயது பெண் ஒருவர், ஜாதவ்புர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில் தனக்கு பரிட்சையமான நபர் ஒருவர் தனது வீட்டுக்கு பொருளாதார உதவி கேட்டு வந்ததாகவும், அப்போது தான் தனியாக இருக்கும் சமயத்தை பயன்படுத்தி கொண்டு தன்னை கழிப்பழித்துவிட்டதாகவும் அவர் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் இச்சம்பவத்தை வீடியோ எடுத்து, போலீஸுக்கு சென்றால் இதை வெளியிடுவேன் என மிரட்டுவதாகவும் அவர் தைரியமாக தெரிவித்துள்ளார். நாடியாவை சேர்ந்தவரான இவர், கொல்கத்தாவில் தனியாக தங்கி, நடிப்பிலும் மாடலிங்கிலும் ஆர்வம் காட்டி வந்துள்ளார். தன்னை கற்பழித்தவருடன் சில காலத்திற்கு முன்பு பழகி வந்ததாகவும், பிறகு கருத்து வேறுபாடுகளால் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் இவர். இதை தொடர்ந்து பண உதவி கேட்டு தனது வீட்டுக்கு வந்து, தன்னிடம் அவர் தவறாக நடந்துகொண்டதாக புகார் தெரிவித்துள்ளார் இந்த இளம் சீரியல் நடிகை.