www.garudabazaar.com

நீங்க வீட்டு 'ஓனர்' கெடையாது... என்னப்பா 'பொசுக்குன்னு' இப்படி சொல்லிட்ட?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா-பாலாஜி இருவருக்கும் அடிக்கடி முட்டல், மோதல்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.  ரோபோட் டாஸ்க்கிலும் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன என்றாலும் அவை பெரிதாக வெளிவரவில்லை. நேற்று ஓபன் நாமினேஷனின் போது கூட பாலாஜி, அர்ச்சனாவை தான் நாமினேட் செய்தார். ஆரம்பமே கொளுத்தி போட்டு வேடிக்கை பார்த்து விட்டோம்.

'You are not owner of this House' Balaji reply for Archana

இனியாவது டாஸ்க் கொடுப்போம் என பிக்பாஸ் நினைத்தார் போல. ஹமாம் சோப்பை வைத்து பந்து டாஸ்க் ஒன்றை அளித்தார். இதற்கு அனிதா, அர்ச்சனா இருவரும் நடுவர்களாக இருந்தனர். ஆரி, ரம்யா, பாலாஜி, ஆஜீத் ஒரு அணியாகவும் சோம், கேப்ரியலா, ஷிவானி மற்றும் ரியோ ஒரு அணியாகவும் பிரிந்தனர். எதிரணியினரின் பந்துகளில் அடி வாங்காமல் வெளியே வரவேண்டும் என்பது தான் போட்டியின் விதி.

இதில் பாலாஜி விளையாடிய போது அடி வாங்கியதில் ஒரு சந்தேகம் அவருக்கு எழுந்தது. இதுதொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார். அப்போது அர்ச்சனா நடுவர்கள் நாங்க எதுக்கு இருக்கோம்? என பாலாஜிக்கு ஆட்சேபம் தெரிவித்தார். இதைப்பார்த்த பாலாஜி நீங்க அம்பயர் தான் இந்த வீட்டு ஓனர் கிடையாது என கோபத்தில் சொல்ல, பதிலுக்கு அர்ச்சனாவும் கொந்தளித்தார்.

இதையடுத்து இருவரும் ஒருவழியாக சமரசத்துக்கு வந்து விளையாட்டை தொடர்ந்தனர். பாலாஜியின் இந்த கேள்வியை பார்த்த ரசிகர்கள் என்னப்பா பொசுக்குன்னு இப்படி கேட்டுப்புட்ட? என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

'You are not owner of this House' Balaji reply for Archana

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.