Yo Yo Honey Singh.."சைக்கோ.. குடும்ப வன்முறை.. பல பெண்களுடன் தொடர்பு".. மனைவி புகார்!
முகப்பு > சினிமா செய்திகள்பாலிவுட் ராப்பரும் பிரபல பாடகருமான ஹிர்தேஷ் சிங் எனும் யோ யோ ஹனி சிங் மீது குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக அவரது மனைவி ஷாலினி தல்வார் குடும்ப வன்முறை புகாரை அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை ஷாலினி தல்வார் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் 'குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின்' கீழ், யோ யோ ஹனி சிங் மீது பரபரப்பு புகாரை தாக்கல் செய்துள்ளார்.
அந்த புகாரில், தனது கணவர் ஹனி சிங் தம்மை உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக துன்புறுத்தியதாகவும், 2011 இல் திருமணத்திற்குப் பிறகு மிகவும் கொடுமைப்படுத்தி, கடுமையாக தன்னை நடத்தியதாகவும், பிற பெண்களுடன் சட்டவிரோதமான உறவுகளை வைத்திருப்பதாகவும் ஷாலினி தல்வார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை அடுத்து பாடகர் யோ யோ ஹனி சிங்கிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பான அவரது பதிலை தாக்கல் செய்ய வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
இது தொடர்பாக, ஷாலினி தனது விண்ணப்பத்தில் ஹனி சிங் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், குறிப்பாக ஒரு பஞ்சாபி நடிகை உட்பட பல பெண்களுடன் முறையற்ற உறவு கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், ரூ.20 கோடி இழப்பீடு கோரியும், டெல்லியில் ஒரு முழுமையான வசதியுள்ள வீட்டிற்கு மாதந்தோறும் ரூ.5 லட்சம் செலுத்துமாறு நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார். எனினும் இந்த பிரச்சினை குறித்து யோ யோ ஹனி சிங் இன்னும் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை என தெரிகிறது.
YO YO HONEY SINGH.."சைக்கோ.. குடும்ப வன்முறை.. பல பெண்களுடன் தொடர்பு".. மனைவி புகார்! வீடியோ