மனைவி தொடர்ந்த குடும்ப வன்முறை வழக்கு.. Yo Yo Honey Singh-ன் முதல் viral பதிவு!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல ராப் பாடகரும், தனியிசை கலைஞருமான யோ யோ ஹனி சிங் மீது அவரது மனைவி ஷாலினி தல்வார் புகார் கொடுத்திருந்தார்.
![Yo Yo Honey Singh reacts over wifes domestic abuse allegations Yo Yo Honey Singh reacts over wifes domestic abuse allegations](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/yo-yo-honey-singh-reacts-over-wifes-domestic-abuse-allegations-photos-pictures-stills.jpg)
இந்த தம்பதியருக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் ஹனி சிங் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், நடிகை உட்பட பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஷாலினி தல்வார் குற்றம் சாட்டியதுடன், டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், ஹனி சிங் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலமுறை கொடுமைப் படுத்தியதாகவும், பாடல்கள், நிகழ்ச்சிகள், ராயல்டிகள் மூலம் சம்பாதித்த மாதம் ரூ. 4 கோடி பணத்தையும் அவர் மது, போதைப்பொருளுக்கு செலவு செய்ததாகவும், ஷாலினி தல்வார் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்தான், தம் மீதான புகாருக்கு யோ யோ ஹனி சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரியாக்ட் செய்துள்ளார். இது தொடர்பாக தமது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள அவர், “என் குடும்பத்தின் மீதும் என் பெற்றோர் மற்றும் தங்கை மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அவதூறானவை. நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, விரைவில் உண்மை வெளிவரும் என நம்புகிறேன். நீதி கிடைக்கும், நேர்மை வெல்லும்” என கூறியுள்ளார்.
மேலும் தன் மனைவி ஷாலினி தல்வாரின் பொய்யான குற்றச்சாட்டுகள் தனக்கு வேதனை அளிப்பதாகவும், அவரது இந்த குற்றச்சாட்டுகள் வெறுக்கத்தக்கவை என்றும் யோ யோ ஹனி சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஷாலினி தல்வார் தொடுத்த மனுவிற்கு ஹனி சிங் பதில் மனு தாக்கல் செய்ய, ஆகஸ்ட் 28 வரை அவகாசம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.