www.garudabazaar.com

இதே நாளில் தான் நான் என் அம்மாவை இழந்தேன்! VJ கல்யாணி எமோஷனல் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான VJ கல்யாணி அள்ளித்தந்த வானம், ரமணா, ஜெயம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.

VJ Kalyani recollects the memoirs of her mom.

இவர் இப்போது, தனது அம்மாவைப் பற்றி ஒரு உருக்கமான பதிவை போட்டுள்ளார். கல்யாணி தனது அம்மா தற்கொலை செய்து இறந்து விட்டார் என இதற்கு முன்பு கூறியிருந்தார். டிசம்பர் 24 என்பது எல்லோருக்கும் மிக கொண்டாட்டமான நாள். ஏனென்றால் கிறிஸ்துமஸ், புது வருடம் என்று அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் எனக்கு மட்டும் வலி நிறைந்த மற்றும் மிகவும் மோசமான நாள் என்றும், என்னுடைய ஆன்மா என்னை விட்டு சென்ற நாள் என கூறி, அம்மா நீ இந்த உலகத்தில் சண்டையிட முடியாமல் சென்ற நாள் என்று தனது உருக்கமான பதிவை போட்டுள்ளார்.

VJ Kalyani recollects the memoirs of her mom.

அந்த நாளில் இருந்து தான், இந்த உலகை நான் வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தேன். நான் பிறப்பதற்கு முன் உனக்கு இந்த உலகத்தைப் பற்றியும் தெரியும், சமூகத்தைப் பற்றியும் தெரியும். ஆனால் நீ இல்லாமல் நான் ஒரு நாள் கூட இருந்ததில்லை. நீ தான் எனக்கு எல்லாமே என கூறியுள்ளார். இந்த உலகத்தை ஒரு சிறந்தவையாக மாற்றி நான் உங்களை வாழ வைத்திருக்க வேண்டும், அதை செய்யாதது என் தவறு என்று கூறியுள்ளார்.

VJ Kalyani recollects the memoirs of her mom.

நீங்கள் மன உளைச்சலுக்கு எப்போது சென்றீர்கள் என தெரியவில்லை. ஆனால் அது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு உதவ வேண்டும் என்ற சூழ்நிலையில், நான் உங்கள் கைகளை பிடித்து இருக்க வேண்டும். நான் அதை செய்ய தவறி விட்டேன். நான் உங்களுக்கு வெறும் மகள் மட்டும் தான். ஆனால் நீங்கள் தான் எங்களுக்கு உலகம். மேலும் நீங்கள் தான் எங்களுக்கு கடவுள், எனக்குத் தெரிந்த வரையில், நீங்கள் மிகவும் தைரியமான மற்றும் அன்பான மனிதர் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.Mental health என்பது மிக முக்கியமானது. மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவு கண்டிப்பாக தேவை. அவர்களை நாம் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எமோஷனலாக கூறியுள்ளார்.

இதே நாளில் தான் நான் என் அம்மாவை இழந்தேன்! VJ கல்யாணி எமோஷனல் ! வீடியோ

VJ Kalyani recollects the memoirs of her mom.

People looking for online information on VJ கல்யாணி, VJ Kalyani will find this news story useful.