Nenjuku Needhi

#VikramInAction இது வேற லெவல்… விக்ரம் படத்துக்காக டிவிட்டரில் எமோஜி… வெளியான செம்ம மாஸ் update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் ரிலீஸாக உள்ளது.

Vikram movie emoji activated in Twitter

Also Read | Breaking: விஜய் சேதுபதிக்கு Farewell … PAN இந்தியா ரிலீஸ்… ‘விடுதலை’ பற்றி வெளியான Exclusive தகவல்கள்

விக்ரம் ரிலீஸ்…

கமல்ஹாசன் நடிப்பில்  உருவாகி வரும் ‘விக்ரம்’திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்காண்டு இடைவெளியில் கமலின் அடுத்த படமாக இந்த திரைப்படம் ரிலீஸாவதால் படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

Vikram movie emoji activated in Twitter

பாடல் & ஆடியோ…

ஆரம்பம் முதலே இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகாகவே இருந்துவரும் நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள், ஆடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது.  படத்தை தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

Vikram movie emoji activated in Twitter

அடுத்தடுத்து Promotions…

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் படத்துக்கான ப்ரமோஷன்களைப் படக்குழு அடுத்தடுத்து செய்துவருகிறது. நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கதருக்காக KH - House of Khaddar என ஒரு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் சார்பில்  ‘KH Memoir’ எனும் வாசனை திரவியம் தயாரிக்கப்படுகிறது. விக்ரம் படத்தின் வெளியீட்டை ஒட்டி, House of Khaddar நிறுவனம் விக்ரம் படத்தின் பெயரில்  ‘KH Memoir’ வாசனை திரவத்தின் லிமிட்டெட் எடிசனை வெளியிட்டுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

Vikram movie emoji activated in Twitter

டிவிட்டரில் எமோஜி..

இதையடுத்து தற்போது டிவிட்டரில் இந்த படத்துக்கான தனி எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது. #VikramInAction என்ற ஹேஷ்டேக்கோடு விக்ரம் படத்தில் கமலின் தோற்றத்தோடு கூடிய அந்த எமோஜி தற்போது டிவிட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கமல் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது. முன்னதாக KGF 2, saahoo, சர்காரு வாரிபாட்டா போன்ற சமீபத்தைய படங்களுக்கும் இதுபோல எமோஜி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read | "ஒரு பாட்டுக்கு tune பண்றேன்னு…"… ARR குறித்து பார்த்திபன் எமோஷனல்!

தொடர்புடைய இணைப்புகள்

Vikram movie emoji activated in Twitter

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram Movie, Vikram movie emoji will find this news story useful.