தெருக்கூத்து கலைஞனாக நடிக்கும் விஜய் சேதுபதியின் வீடியோ தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி குறிப்பிட்ட சில படங்களின் மூலம் பல ரசிகர்களை பெற்றார். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களின் வெற்றி இவரை தமிழில் ஒரு முன்னணி நடிகராக வலம் வர செய்தது. சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தெலுங்கு, ஹிந்தியிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். பொதுவாகவே ஹீரோவாக நடித்த நடிகர்கள் அந்த இமேஜில் இருந்து வெளிவர தயங்குவார்கள். ஆனால், விஜய் சேதுபதி பல குணசித்திர கதாபாத்திரத்திலும், வில்லனாக நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். சூப்பர் டீலக்ஸ், கா/பெ ரணசிங்கம் போன்ற படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாக இருக்கும். காதல், ரொமான்ஸ், வில்லன் என்று தனக்கென ஒரு தனி ஸ்டைலை ஃபாலோ செய்து தன் ரசிகர்களுக்கு ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
இந்த வருடம் இவர் நடிப்பில் பல படங்கள் வெளியானது.இவர் இப்போது கமல் நடிக்கும் விக்ரம் படத்திலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல், மாமனிதன் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் அனைத்து படங்களும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. சமீபத்தில் இவருக்கு துபாயில் செல்வாக்குமிக்க நடிகர் என்ற விருதும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. துபாயில் சர்வதேச புரோமோட்டர்ஸ் சங்கத்தின் சார்பில் அமீரகத்தின் 50-வது பொன்விழா மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அஜ்மான் ஆட்சியாளர் அலுவலகத்தின் தலைவர் டாக்டர் மாஜித் பின் சயீத் அல் நுயைமி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதிக்கு சினிமாத்துறையில் செல்வாக்கு மிகுந்த நட்சத்திரதிற்கான விருது வழங்கப்பட்டது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இவரை பற்றிய செய்திகளும், வீடியோக்களும் இவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது. தெருக்கூத்து கலைஞனாக இவர் நடித்திருக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவுகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
#விஜய்சேதுபதி #vijaysethupathy #streetplayperformer #தெருக்கூத்து
விஜய் சேதுபதியின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. தரமான சம்பவமா இருக்கும் போல! வீடியோ