Pattamboochi

”பாக்ஸ் திறந்தாலே உங்க அன்பு தெரியுதும்மா…” விஜய்க்கு அம்மாவின் பிறந்தநாள் பரிசு இதுதான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் பிறந்தநாளை மிகவும் எளிமையான முறையில் அவரின் தாயார் ஷோபா சந்திரசேகர் கொண்டாடியுள்ளனர்.

Vijay mother shoba birthday celebration in oldage home

விஜய்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் விஜய் கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரின் தந்தை S.A. சந்திரசேகர் திரைப்பட இயக்குனராகவும், தாயார் ஷோபா பாடகியாவும் முத்திரைப் பதித்தவர்கள். இவர்கள் இருவருமே விஜய்யின் ஆரம்பகால திரைப்படப் பயணத்துக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தவர்கள்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் நடிப்பில் பல படங்களை இயக்கினார். அவற்றுள் பல படங்களின் தயாரிப்பாளராக ஷோபா பணியாற்றினார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். விஜய்யின் பாட்டுத் திறமைக்கு வித்திட்டவரும் ஷோபாவே. ஷோபா behindwoods சேனலில் கலந்துகொண்டு நடத்திவரும் புதிய நிகழ்ச்சி ஒன்றில் விஜய் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டு வருகிறார்.

Vijay mother shoba birthday celebration in oldage home

பிறந்தநாள்…

விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில் ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அவருக்கு முன் கூட்டியே வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதியோர் இல்லம் ஒன்றில் அங்கிருப்பவர்களோடு கேக் வெட்டி, அவர்களுக்கு உணவளித்து எளிமையாகக் கொண்டாடியுள்ளார். இந்த நிகழ்வை பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் Exclusive ஆக வெளியாகி கவனம் பெற்றுள்ளது. முன்னதாக இன்று விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

”பாக்ஸ் திறந்தாலே உங்க அன்பு தெரியுதும்மா…” விஜய்க்கு அம்மாவின் பிறந்தநாள் பரிசு இதுதான் வீடியோ

மேலும் செய்திகள்

Vijay mother shoba birthday celebration in oldage home

People looking for online information on Shoba chandrsekar, Varisu, Vijay birthday will find this news story useful.