www.garudabazaar.com

அப்படி போடு!! வசந்தபாலனின் புதிய படத்தில் வில்லியாக நடிக்கும் பிரபல BiggBoss தமிழ் நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வசந்த பாலன் இயக்கி, நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில், கதையோட்டத்திற்கு வலுசேர்க்கும் கதாபாத்திரங்களில் நடிகை வனிதா விஜய்குமாரும், நடிகர் அர்ஜுன் சிதம்பரமும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெறுகின்றனர்.

vasanthabalan next vanitha and arun chidambaram antagonist

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் வசந்தபாலன். தற்போது ஜி.வி.பிரகாஷ் இயக்கத்தில் ஜெயில் படத்தை இயக்கி வரும் வசந்தபாலன், தமது நண்பர்களுடன் இணைந்து அர்பன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார்.

வசந்தபாலனின் இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அர்ஜூன் தாஸ். இந்நிலையில் தான் வசந்தபாலன் இயக்கும் இந்த புதிய படத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்கிறார். இதனிடையே இந்த படத்தில் வனிதா விஜய்குமார் மற்றும் நடிகர் அர்ஜுன் சிதம்பரம் நடிக்கின்றனர்.

இதுகுறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இயக்குனர் வசந்தபாலன், “நான் இயக்கும் புதிய திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜூன் சிதம்பரமும், நடிகை வனிதா விஜயகுமாரும் நடிக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி ” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

vasanthabalan next vanitha and arun chidambaram antagonist

People looking for online information on G Vasanthabalan, Vanitha will find this news story useful.