www.garudabazaar.com

அய்யா வைகுண்டர் தலைமை பதியில் தரிசனம் செய்த உதயநிதி ஸ்டாலின்.. வைரல் ஃபோட்டோஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதுடன் சினிமாவிலும் நடித்து வருகிறார்.

Udhayanidhi Stalin Visits Ayya Vaikundar Swamithoppe pathi

அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், டான் , காத்து வாக்குல ரெண்டு காதல், திருச்சிற்றம்பலம், விக்ரம், சர்தார், லவ் டுடே உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் முன்னணி திரைப்படங்களை தம்முடைய ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin Visits Ayya Vaikundar Swamithoppe pathi

நடிகராக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்தார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.  ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள  “கலகத் தலைவன்” படம் உலகமெங்கும் நவம்பர் 18 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது.

Udhayanidhi Stalin Visits Ayya Vaikundar Swamithoppe pathi

 

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மெட்ராஸ் பட புகழ் கலையரசனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் போக, நடிகர் பிக்பாஸ் ஆரவ் வில்லனாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு அரோல் கொரேலி & ஸ்ரீகாந்த் தேவா இணைந்து இசையமைத்துள்ளார்கள்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றுள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் & சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சுவாமி தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் பஞ்சபதிக்கு சென்று பள்ளியறையில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Udhayanidhi Stalin Visits Ayya Vaikundar Swamithoppe pathi

உதயநிதி ஸ்டாலினுடன் மேயர் மகேஷ், அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Udhayanidhi Stalin Visits Ayya Vaikundar Swamithoppe pathi

People looking for online information on Udhyanidhi stalin will find this news story useful.