Reliable Software
www.garudabazaar.com

"தனுஷின் ஆடுகளம் படத்துல டாப்ஸி கேரக்டரில் த்ரிஷா".. தீயாய் பரவும் மேலும் சில ஸ்டில்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய முதல் திரைப்படம் பொல்லாதவன்.

trisha as lead in dhanush aadukalam viral stills before tapsee

இந்த திரைப்படம் இயக்குநர் வெற்றிமாறனுக்கு முதல் திரைப்படமாகவும், வெற்றிப்படமாகவும் அமைந்தது. இதனை தொடர்ந்து தனுஷூடன் வெற்றிகரமாக கைகோர்த்து அடுத்தடுத்த திரைப்படங்களை வெற்றிமாறன் இயக்கத் தொடங்கினார்.

அதில் பொல்லாதவனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நாயகியாக டாப்ஸி நடித்திருந்தார்.

மேலும் ஆடுகளம் முருகதாஸ், கிஷோர், நரேன் மற்றும் பலர் முன்னணி நடிகர்கள் நடித்த இந்த திரைப்படத்துக்காக தனுஷ்க்கு தேசிய விருது கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்துக்கும் அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

முன்னதாக ஆடுகளம் படத்தில் டாப்ஸி நடிப்பதற்கு முன்பாக திரிஷா நடிப்பதற்காக பேசப்பட்டார் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவற்றை உறுதிப்படுத்தும் விதமாக ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கு பதிலாக, டாப்ஸியின் அதே காட்சிகளில் திரிஷா இடம்பெறும் சில காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ALSO READ: "கோ படத்துல சிம்புவா?".. ஜீவா நடித்த அதே காட்சிகளில்..இணையத்தில் தெறிக்கவிடும் Viral புகைப்படங்கள்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

trisha as lead in dhanush aadukalam viral stills before tapsee

People looking for online information on Aadukalam, Dhanush, Trisha, Vetrimaaran will find this news story useful.