டிக்டாக் பிரபலம் GP முத்து நடிகராக அறிமுகம் ஆகிறார் ... வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த வருடம் நீக்கப்பட்ட சீன செயலியான டிக்டாக்கின் மூலம் பிரபலமடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். பாதுகாப்பு நலன் கருதி டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டாலும் எளிய சாதாரண மக்களும் தங்கள் திறமைகளின் மூலம் பெற்ற புகழும் பிரபலமும் மிகையாகாது. சிறுவர்கள், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் இந்த செயலின் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வந்தனர். அப்படி பிரபலமடைந்து சினிமா வாய்ப்பு கிடைத்தவர்களும் மிக அதிகம். இந்நிலையில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் உடன்குடி அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த Tiktok பிரபலம் Gp முத்து. இவரது காமெடி வீடியோகள் மிகவும் வைரலாகியது. இந்நிலையில் டிக்டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் ஜிபி முத்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில். தற்போது மீண்டும் தனது பழைய பாணி நகைச்சுவையை பின்பற்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "இன்று முதல் புதிய படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பம்" என்ற கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.