புகார் கொடுத்த சுகந்தி.. ‘டிக் டாக்’ திவ்யாவை கைது செய்த தனிப்படை!! நடந்தது என்ன?
முகப்பு > சினிமா செய்திகள்யூடியூபிலும் சமூக வலைதளங்களிலும் ஆபாச பேச்சுகளை பேசி வீடியோ வெளியிட்டதற்காக டிக்டாக் பிரபலம் திவ்யாவை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி அருகே இருக்கும் நாகலாபுரத்தை சேர்ந்தவர் சுகந்தி. டிக் டாக் மூலம் பிரபலமான சுகந்தி, பலதரப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ சர்ச்சைகளில் சிக்கி அவற்றுக்கு விளக்கமும் அவ்வப்போது கொடுத்து வருவார். சுகந்தியுடன் சுகந்தியின் சகோதரியும் அவ்வப்போது யூடிபில் பல்வேறு பேச்சுகளை பேசி வீடியோக்கள் வெளியிடுவார். இதனால் இவர்கள் இருவருமே பிரபலம்தான்.
இவர்களை போலவே தஞ்சை மாவட்டம் அருங்குளத்தை சேர்ந்த திவ்யா டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். திவ்யாவும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியவர். ஆனால் டிக் டாக் செயலி பிற்காலத்தில் தடை விதிக்கப்பட்டதை அடுத்து தொடர்ந்து யூடியூபில் பேசி பதிவேற்ற தொடங்கினார் திவ்யா.
இதனிடையே யூடியூபர் திவ்யா மற்றும் சுகந்தி இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து மோதல் இருந்து வந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியும், விமர்சித்தும், வீடியோக்களில் மாறிமாறி வசைபாடி பேசிக் கொண்டிருந்ததை அனைவருமே அறிவர். அதன் பின்னர் யூடியூபர் திவ்யா, சுகந்தி குறித்து வலைதளத்தில் ஆபாசமாக பேசிவிட்டதாக சுகந்தி கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் தேனி போலீசார், சுகந்தி அளித்த இந்த புகார் குறித்து விசாரணை செய்து, தனிப்படை அமைத்து திவ்யாவை தேடி வந்தனர்.
அந்த சமயத்தில்தான் போலீசார் தன்னை தேடுவதை அறிந்து தலைமறைவான திவ்யா, போலீசார் தன்னுடைய செல்போன் நம்பரை வைத்து தன்னை டிராக் செய்து வருவதை அறிந்ததும், தஞ்சை, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டே இருந்தார். இது குறித்து அவரே பதிவிட்ட ஒரு வீடியோ ஒன்றில், “நான் ஜெயிலுக்கு எல்லாம் வர முடியாது.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. சமூக வலைதளங்களில் நான் என்ன தவறு செய்தேன்?” என்று திவ்யா கதறியும் இருந்தார்.
இந்த நிலையில்தான் நாகூரில் திவ்யாவை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து தேனி சைபர் கிரைம் போலீசார் அலுவலத்திற்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போலீசார் திவ்யாவை விசாரித்ததுடன் நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர்.