Video: "பசங்க கிட்ட பொண்ணுங்க எதிர்பாக்குறது இதான்" - நோட் பண்ணுங்கப்பா .. பாவனி சொன்ன டிப்ஸ்..
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவி சின்னத்திரையில் நாயகியாக வலம் வந்த பாவனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தன்னுடைய வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டார். அதன்படி, கணவரை இழந்த பாவனி தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை வாழ்ந்து கொண்டிருப்பதாக பகிர்ந்து இருந்தார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக விஜய் டிவி கோரியோகிராபராக இருந்த அமீர் உள்ளே வந்தார்.
வந்தவர் பாவனிடம் விளையாட்டாக ஆரம்பத்தில் பேசினாலும், பின்பு சீரியஸாக தன்னுடைய காதலை பாவனிக்கு சொல்ல தொடங்கினார். ஒரு வழியாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை மையமாக வைத்து BB Jodigal நிகழ்ச்சி நடந்து வந்து கொண்டிருந்தது. அதன்படி BB Jodigal நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் டான்சராக பங்குபெற்ற அமீர் மற்றும் பாவனி இருவரும் டான்ஸ் பார்ட்னராக இணைந்து ஆடி வந்தனர். இந்த BB Jodigal நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இருவரும் தற்போது வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கின்றனர்.
நீங்கள் மிகச் சிறந்த மனிதர். மாஸ்டர். டான்ஸ் ஆடும் போது மிகவும் உறுதுணையானவர். நல்ல நண்பர் . எனவே நம்முடைய வாழ்க்கை பயணத்தை சேர்ந்து தொடங்கலாம். என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த இணையராக இருங்கள். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். நீங்கள் எனக்காக எப்போதும் இருப்பீர்களா.? எப்போதும் ஐ லவ் யூ” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் பிரத்தியேக ரசிகர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அமீர் மற்றும் பாவனி பேசினர். அப்போது அமீர் பேசும்பொழுது, “நாங்கள் இருவரும் பிக்பாஸ் ஜோடிகளில் சேர்ந்து ஆட வேண்டும் என்று கேட்டபொழுது இருவருமே மறுத்து வேண்டாம் என்றுதான் சொன்னோம். பிறகு நண்பர்கள், ரசிகர்கள், குறிப்பாக பிரியங்கா தான் 50% நாங்கள் இருவரும் சேர்ந்து ஆடியதற்குக் காரணமாக இருந்தார்.
ஆனாலும் எனக்கு தொடக்கத்தில் இவருக்கு என்ன மாதிரி ஆட வரும் என்பதை கண்டுபிடித்து பயிற்சி கொடுப்பதற்கு சிரமமாக இருந்தது. அதன்பிறகு அவர் மிகவும் மெனக்கெட்டார். அவரும் அனாயசமாக பயிற்சிக்கு தயாராகவே இருந்தார். இப்போதும் அவர் டைட்டில் வென்றிருக்கிறார் என்றால் அதற்கு முழுக்க முழுக்க அவருடைய மெனக்கெடல் தான் காரணம். டான்ஸ் ஆடுபவர்களை பற்றி எல்லாருக்குமே தெரியும். ஆனால் தாமரையின் கணவர் பார்த்தசாரதி ஆகட்டும், பாவனி ஆகட்டும்.. இவர்களெல்லாம் அவர்களுடைய சுய மெனக்கெடலால் இந்த அளவுக்கு ஆடி இருக்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து அமீரை ஏன் தனக்கு பிடித்தது என்றும் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்தும் பேசியிருந்தார். அதன்படி, “எனது ஷூ லேஸ் அவிழ்ந்தால் கூட, பொது இடம் என்றும் பாராமல் உட்கார்ந்து கட்டிவிடுவார். பெண்கள் அந்த சின்ன சின்ன விசயங்களில் எப்படி ஆண்கள் கேர் செய்கிறார்கள் என்றுதான் பார்ப்போம். வேற ஏதுவும் பெருசா எதுவும் செய்ய வேண்டாம்..” என்று கூறுகிறார்.
VIDEO: "பசங்க கிட்ட பொண்ணுங்க எதிர்பாக்குறது இதான்" - நோட் பண்ணுங்கப்பா .. பாவனி சொன்ன டிப்ஸ்.. வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- ❤️ PAVNI Possesive😍 AMIR-அ REJECT பண்ண Girls-க்கு THANKS😜 HEART Open பண்ணி LOVE கொட்டிட்டாங்க PAVMIR
- Pavni, Amir MARRIAGE GAMES 😍 ஐயர் வந்துட்டாரு! மாப்பிள்ளை, பொண்ணு Ready-ஆ 🥰 SWEET Twist
- AMIR Interviews PAVNI ❤️ மொத்த Love Secrets-யும் வாங்கிட்டாரு… Romantic கில்லாடி பா 😍
- Pavni Proposes Amir 1st TIME ❤️ உருகி உருகி காதல் சொன்ன PAVNI 😍 வெட்கப்பட்டு நெகிழ்ந்த AMIR 🥰 LOVE U
- ❤️ Amir & Pavni's MOST ROMANTIC Latest Fans Festival PROMO ❤️
- "Pavni, இனி எங்க வீட்டு பொண்ணு" 😍 உரிமையா சேர்த்துக்கிட்டு கொண்டாடும் Amir குடும்பம் ❤️
- Love You Amir 😘PAVANI Ok சொல்லியாச்சு, Night தூக்குறோம்... AMIR உடன் சேர்ந்து Plan போட்ட PRIYANKA..🤣
- ALHENA B'Day Party 😍 Shyji கொடுத்த Surprise, AMIR ஆடிய Dance😍PAVNI, Niroop
- "AMIR, நீ எனக்கு Dance Partner-ஆ கிடைக்க நான் கொடுத்து வெச்சுருக்கணும்.." 🥺 PAVNI Emotional
- என்னை Love பண்ணு PAVNI 😍 Ramya Krishnan முன்னாடி PAVNI-ய Propose பண்ண AMIR..
- Amir 💖 Pavni Live Dance😍Performance à La Cutest😱உருக உருக Romance💕
- PAVNI Kiss கொடுத்துட்டா😘 துள்ளி குதிச்சு குஷியான AMIR..அறைந்த PAVNI