www.garudabazaar.com

தரமான தலைநகரம் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் ... யார் யார் வெளியிட்டாங்க தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநரும் நடிகருமான சுந்தர் சியின் நடிப்பில் உருவாகி வரும் படம் தலைநகரம் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தை கலக்கி வருகிறது.

thalainagaram 2 movie first look poster release Today

நடிகர் சுந்தர் சி நடிப்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் தலைநகரம். இந்தப் படம் சுந்தர் சி முதல் முறையாக ஹீரோவாக நடித்த படம். இப்படத்தில் ஜோதிர்மயி, போஸ் வெங்கட், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களும் லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  வடிவேலுவின் முக்கியமான படங்களில் இந்தப் படமும் ஒன்றாக அமைந்தது.

thalainagaram 2 movie first look poster release Today

சுராஜ் இயக்கத்தில் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் கேரக்டரின் தலைப்பில் தனது ரீ என்ட்ரியை தொடங்கியுள்ளார் வடிவேலு.நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் அவர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சம்மர் ரிலீசாக படம் திட்டமிடப்பட்டுள்ளது.

நாய் சேகர்

thalainagaram 2 movie first look poster release Today

இந்தப் படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார்.  வடிவேலுவின் பாடி லாங்குவேஜூம் புதுகெட்டப்பும் ரசிகர்களுக்கும் சிரிப்பு விருந்தாகவே இருந்தது. குறிப்பாக நிஜமாவே நானும் ரவுடிதான், பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மன்ட் வீக் போன்ற வசனங்கள் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தி செல்கிறது. மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் எழுத வசதி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

தலைநகரம் இரண்டாம் பாகத்தில்   வடிவேலு நடிப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது குறித்து படக்குழு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

தலைநகரம் 2

thalainagaram 2 movie first look poster release Today

இந்நிலையில் தலைநகரம் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு  கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. இயக்குனர் வி.இசட்.துரை இப்படத்தை இயக்குகிறார். இருட்டு படத்தின்மூலம் இணைந்த சுந்தர் சி மற்றும் வி இசட் துரை கூட்டணி தற்போது தலைநகரம் 2 படத்தில் இணைந்துள்ளது.இதனிடையே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிடுவதாக தெரிவித்த நிலையில், மாஸான பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரை நடிகர் ஆர்யா, மற்றும் ஜீவா, நடிகை குஷ்பூ ஆகியோர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். தலைநகரம் 2 படத்தை  ரைட் ஐ தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

தொடர்புடைய இணைப்புகள்

thalainagaram 2 movie first look poster release Today

People looking for online information on சுந்தர் சி, தலைநகரம் 2, Kushbu, Naisekar, Sundarc, Thalainagaram2, Vadivelu, Zdhorai will find this news story useful.