www.garudabazaar.com

ரஷ்ய சாலையில், புடவையுடன் கெத்தாக நடைபோடும் தாப்ஸி!.. டாப் ட்ரெண்டிங் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறியப்பட்டவர் தாப்ஸி பானு.

Taapsee Pannu in Saree On Streets russia Petersburg

தொடக்கத்தில் ஆடுகளம் திரைப்படத்தில் அமைதியாக நடித்த தாப்ஸி அடுத்தடுத்து தமிழில் அவ்வப்போது தான் சில படங்களில் நடித்தாலும் கூட துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்க முன்வந்தார்.

இந்திய திரை உலகம் முழுவதும் பிரபலமான தாப்ஸி பானு, தாம் நடிக்கும் திரைப்படங்களின் கதாபாத்திர தேர்விலும் சரி, பொதுவாழ்க்கையில் தனிப்பட்ட முறையிலும் சரி, தாம் பேசும் கருத்துக்கள் எதுவானாலும் சரி, அனைத்தையும் துணிச்சலுடன் முன்வைக்கும் திறன் உடையவர்.

தமிழில் தாப்ஸி முதன்மைப் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையான கேம் ஓவர் திரைப்படத்தில முதன்மையாக நடித்திருந்தார். இந்த படம் குறித்து பேசும்போது கூட ஹீரோ, ஹீரோயின் என்று ஏன் பேசுகிறீர்கள்? ஒரு பெண் ஒரு கதையின் ஹீரோவாக ஏன் இருக்கக்கூடாது? அல்லது ஒரு கதையே ஹீரோவாக ஏன் இருக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

தாப்ஸியின் இப்படியான பார்வைக்கும் அவருடைய சிந்தனைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில் தாப்ஸி புடவை, கூலிங் கிளாஸ் சகிதம ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் சாலையில் சுற்றித்திரியும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதை காணும் பலரும் வெளிநாட்டில் சேலையுடன் கெத்தாக சுற்றித் திரிகிறார் தாப்ஸி என்று கமெண்ட்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ALSO READ: வேட்டை நாயுடன் 'வொண்டர் வுமன்' தீமில் 'அசுரன்' பட நடிகையின் வேறலெவல் ஃபோட்டோஷூட்!

தொடர்புடைய இணைப்புகள்

Taapsee Pannu in Saree On Streets russia Petersburg

People looking for online information on Taapsee Pannu, Trending, Viral will find this news story useful.