www.garudabazaar.com

''சுஷாந்த்-க்கு ரியா விஷம் கொடுத்திருக்கிறார்..!! '' - காதலி மீது சுஷாந்தின் அப்பா குற்றச்சாட்டு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுஷாந்தின் காதலி ரியா மீது நடிகரின் தந்தை பகீரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 

சுஷாந்த் காதலி மீது நடிகரின் அப்பா புகார் | Sushant's father kk singh shocking allegation on rhea chakraborty

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் Nepotism-தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. இதனிடையே சுஷாந்த் சிங்கின் காதலியும் நடிகையுமான ரியாவுக்கு அவரது தற்கொலை தொடர்பிருப்பதாக பரபரப்பு திருப்பம் ஏற்பட்டது.

சுஷாந்த் காதலி மீது நடிகரின் அப்பா புகார் | Sushant's father kk singh shocking allegation on rhea chakraborty

இந்நிலையில் தற்போது சுஷாந்தின் அப்பா கே.கே.சிங் ரியா சக்ராபொர்த்தி மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றில் பேசிய அவர், ''ரியா தான் என் மகன் சுஷாந்தை கொன்றது. நீண்ட காலமாக அவர் சுஷாந்திற்கு விஷம் கொடுத்து வந்துள்ளார். அவரை உடனடியாக கைது செய்யவேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார். சுஷாந்தின் அப்பா வைத்த இந்த புதிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நடிகை ரியாவின் தரப்பில், அவர் மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் மறுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

சுஷாந்த் காதலி மீது நடிகரின் அப்பா புகார் | Sushant's father kk singh shocking allegation on rhea chakraborty

People looking for online information on KK Singh, Rhea Chakraborty, Sushant Father, Sushant Singh Rajput will find this news story useful.