www.garudabazaar.com
www.garudabazaar.com

பொம்மியின் பேக்கரியில் வேலை செய்யும் மாறன்.. சூரரைப் போற்று படத்தில் நீக்கப்பட்ட சீன் வைரல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் 'சூரரைப் போற்று'. சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, அப்பர்னாவின் எதார்தம், சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் எதார்த்தமான ஒளிப்பதிவு என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத்தது.

suriyas soorrai potru deleted scene பொம்மியின் பேக்கரியில் வேலை செய்யும் மாறன்... சூரரைப் போற்று நீக்கப்பட்ட சீன்

இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் சூரரைப் போற்று படத்திற்கு முக்கிய இடம் உண்டு. ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும் வேற லெவல் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் சூரரைப்போற்று படத்தின் முதல் டெலீடட் சீனை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சீனில் தன்னிடம் உள்ள அனைத்தையும் இழந்த மாறன் பொம்மியின் பேக்கரியில் வேலை செய்வது போலவும், அதனால் உறவினர்கள் அவரை கேலி கிண்டல் செய்து அவர் அதன் பிறகு அவர் விவசாயம் செய்வதாகவும் காட்டப்படுகிறது. மிகவும் உருக்கமான இந்த சீன் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொம்மியின் பேக்கரியில் வேலை செய்யும் மாறன்.. சூரரைப் போற்று படத்தில் நீக்கப்பட்ட சீன் வைரல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

suriyas soorrai potru deleted scene பொம்மியின் பேக்கரியில் வேலை செய்யும் மாறன்... சூரரைப் போற்று நீக்கப்பட்ட சீன்

People looking for online information on Soorarai Potru, Suriya will find this news story useful.