www.garudabazaar.com

ஜெயிச்சாப்றம் 'Super Singer 8'-ன் வின்னர் ஸ்ரீதர் சேனாவின் முதல் Emotional Video! பிரபலங்கள் வாழ்த்துமழை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக அன்றும் இன்றும் இருந்து வருவது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

supersinger8 winner sridhar sena first emotional video

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விஜய் டிவியின் தொடக்க கால ரியாலிட்டி ஷோக்களில் இருந்தே அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றும் பார்க்கப்படும் ஷோவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இன்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தனக்கே உரிய தனித்தன்மையை இழக்காமல் வெற்றிநடை போட்டு வருகிறது என்று சொல்லலாம்.

அந்த வகையில் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடந்திருக்கிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சியில் வின்னர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

அதன்படி பாடகர் ஸ்ரீதர் சேனா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இந்த 8வது சீசனில் வெற்றி பெற்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக அவர் வின்னராக அறிவிக்கப்பட்டவுடன் சூப்பர் சிங்கர் செட்டிலிருந்து குக் வித் கோமாளி மணிமேகலை வீடியோ எடுத்து பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து கலக்கப்போவது யாரு 5வது சீசனின் வின்னரான குரேஷி உள்ளிட்ட பலரும் ஸ்ரீதர் சேனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதேபோல் பாடகி மற்றும் எண்டர்டெயினர் சிவாங்கி, பாடகர் கனிமொழி உள்ளிட்டோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். குக் வித் கோமாளி ரித்திகாவும் ஸ்ரீதர் சேனாவுடனான புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய ஸ்ரீதர் சேனா, விஜய் டிவிக்கும் தன்னுடைய பெற்றோருக்கும், தன்னை இதுவரை சப்போர்ட் செய்த அனைத்து மக்களுக்கும், உலகமெங்கும் இருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இதுதான் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் பதிவிட்ட முதல் வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பரத் தனக்கு இவ்வளவு வாக்குகள் வந்திருப்பது மிகவும் சர்ப்ரைஸாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாகவும், அந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றும் குறிப்பிட்டதுடன், தனக்கு சப்போர்ட் செய்த அனைத்து மக்களுக்கும் நன்றி என்றும் உருக்கமாகப் பேசி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்ற இந்த சூப்பர் சிங்கர் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் ஸ்ரீதர் சேனாவின் வெற்றியை பலரும் தங்களுடைய வெற்றியாகவே கருதுகின்றனர். அந்த அளவுக்கு அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே அனைவரும் பார்த்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிச்சாப்றம் 'SUPER SINGER 8'-ன் வின்னர் ஸ்ரீதர் சேனாவின் முதல் EMOTIONAL VIDEO! பிரபலங்கள் வாழ்த்துமழை! வீடியோ

supersinger8 winner sridhar sena first emotional video

People looking for online information on Shweta MohanShweta Mohan singingShweta Mohan best songsShweta Mohan on Super SingerSuper Singer finalssuper singer jukeboxsuper singer best performancesuper singer best performancesShweta Mohan interviewShweta Mohan judgingSuper singer best songssupe will find this news story useful.