“சம்பாதிச்ச பணத்தயெல்லாம்”... அழுதுவிட்ட முத்துசிற்பி.. அதிர்ந்த சூப்பர் சிங்கர் அரங்கம்!
முகப்பு > சினிமா செய்திகள்மேடை நாடகங்களில் பாடிக்கொண்டிருந்தவர் முத்துசிற்பி. தற்போது விஜய் டிவி சூப்பர் சிங்கரில் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் பாடி வருகிறார்.

விஜய் டிவியில் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு உலகளாவிய ரசிகர்கள் உண்டு. நேர்த்தியான ஆர்க்கெஸ்ட்டேஷன் மற்றும் விதவிதமான உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய ஒரு நிகழ்ச்சியாகவும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இருப்பதுதான் இதற்கு முக்கியமான ஒரு காரணம்.
இன்னொரு காரணம், கிராமப்புற பகுதிகளில் மட்டும் பாடல்களை பாடிவந்த அதீத திறமை சாலிகளை அடையாளம் கண்டு, உலகத் தொலைக்காட்சி ரசிகர்கள் மற்றும் இணையவாசிகளுக்கு அவர்களை அறிமுகப்படுத்தப் படுவதும் தான். அந்த வகையில் 5000 மேடைகளில் பாடிவந்துள்ள நாட்டுப்புறப் பாடகர் முத்துசிற்பிக்கு தற்போது சூப்பர் சிங்கரில் பாடக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
கனீர் குரலால் எப்பேற்பட்ட ராகத்தையும் சுரத்தையும் தன் சுதியால் வளைத்து பாடும் முத்துசிற்பிக்கு ரசிகர்களும் ஏராளாம் இருந்தனர். அவர் விஜய் தொலைக்காட்சியில் பாடியதைத் தொடர்ந்து உலகம் முழுவதில் இருந்தும் இன்னும் அவருக்கு ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். இந்நிலையில் வரும் வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு விருந்தினர்களான நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் நடிகர் ரியோ உள்ளிட்டோர் அமர்ந்திருந்த அந்த அரங்கில் முத்துசிற்பி பாட்டு பாடி முடித்தபின்னர் ஒரு விஷயம் சொன்னார்.
நீங்க Great sir! 👏
சூப்பர் சிங்கர் - வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #SuperSinger #FolkRound #VijayTelevision pic.twitter.com/QrkRUtIA8C
— Vijay Television (@vijaytelevision) March 5, 2021
அதில், தான் நாடகத்தில் பாடி சம்பாதித்த பணத்தையெல்லாம் முதலீடாக போட்டு சில ஆல்பம் பாடல்களை செய்ததாக அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னவுடனேயே ரம்யா நம்பீசன் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கிறார். பின்னர், “வெகுசிலர் மட்டும் தான், தாங்கள் கலைகள் மூலம் சம்பாதித்த பணத்தை கலைகளிலேயே முதலீடாக்குவார்கள். நீங்கள் ஒரு ஆத்மார்த்தமான கலைஞர்” என்று முத்துசிற்பியை பார்த்து ரியோ கூற, முத்துச்சிற்பி கண்கலங்குகிறார்.