'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' சீரியல் ஹீரோ தனது திருமணம் குறித்து அறிவிப்பு
முகப்பு > சினிமா செய்திகள்தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகர்களையும் சினிமா பிரபலங்களை போலவே ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகிறார். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரும் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த சீரியலில் நடித்து வரும் வினோத் பாபு, தேஜாஸ்வினி ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம்.
இந்நிலையில் இந்த சீரியலில் வேலுவாக நடிக்கும் வினோத் பாபுவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அவர் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் அறிவித்துள்ளார். அதில், ''காதலர் தின வாழ்த்துகள். இதனால சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுங்கோ. ஹேமலதா என்பவருடன் திருமணம் முடிந்துள்ளது. லவ் பண்ணுங்க பாஸ் லைவ் நல்லா இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.