www.garudabazaar.com

சிம்புவின் மாநாடு மீண்டும் Drop..?! - கடுப்பான தயாரிப்பாளர்.. வெளியான Official Statement.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்புவின் மாநாடு படம் குறித்து அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார். 

சிம்புவின் மாநாடு குறித்து தயாரிப்பாளர் கருத்து | str simbu's maanaadu producer suresh kamatchi slams film dropped news

சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கும் இத்திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ், ப்ரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

சிம்புவின் மாநாடு குறித்து தயாரிப்பாளர் கருத்து | str simbu's maanaadu producer suresh kamatchi slams film dropped news

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தை படக்குழு தற்போது ட்ராப் செய்வதாக சில செய்திகள் வெளியாகின. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவில், ''இதுபோல் செய்திகள் மீண்டும் வந்தால், நான் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்தை சும்மா விடமாட்டேன். எனக்கு எப்போதும் ஊடகத்துறையினர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. மாநாடு ட்ராப் தொடர்பாக நான் எந்த விஷயமும் சொல்லவில்லை. தயாரிப்பாளரின் கருத்தை கேட்காமல், எப்படி இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடலாம்..? மாநாடு ஒருபோதும் ட்ராப் செய்யப்பட மாட்டாது. போதும், நிறுத்துங்கள்.'' என கடுமையாக பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

சிம்புவின் மாநாடு குறித்து தயாரிப்பாளர் கருத்து | str simbu's maanaadu producer suresh kamatchi slams film dropped news

People looking for online information on Maanaadu, Maanaadu Drop, Simbu, Str, Suresh Kamatchi, Venkat Prabhu will find this news story useful.