RRR Others USA
www.garudabazaar.com

மாணிக்க விநாயகம் பேரிழப்பு.. மனம் உருகிய பாடகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவு காரணமாக  காலமானார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Singers Shared emotional about Manikka Vinayagam Demise

மாணிக்க விநாயகம் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.

Singers Shared emotional about Manikka Vinayagam Demise

இவரது மறைவுக்கு முன்னணி பாடகர்கள் தங்களது இரங்கல் செய்திகளை வீடியோ மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

சோகத்தில்  மூழ்கிய மக்கள்

ஒரு பாடகராக மட்டும் இல்லாமல், நடிகராகவும் தன்னை நிரூபித்தவர் மாணிக்க விநாயகம். இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. 2003ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்தார். சிறந்த குணச்சித்திர நடிகராகவும் இருந்தார். கடந்த சில நாட்களாகவே உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மாணிக்க விநாயகம், நேற்று மாலை காலமானார். இவரது மறைவு செய்தி சினிமா பிரபலங்களையும், ரசிகர்களை  மட்டுமல்லாமல் பல அரசியல் தலைவர்களையும் பேர் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

முதலமைச்சர் வருகை

Singers Shared emotional about Manikka Vinayagam Demise

பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு செய்தி கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதல் ஆளாக நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பிரபல திரைப்படப் பாடகர் திரு.வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அன்பைப் பொழிந்து, பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட பலரும் மாணிக்க விநாயகம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாடகர்கள் வருத்தம்

Singers Shared emotional about Manikka Vinayagam Demise

முன்னணி பாடகர்கள் மாணிக்க விநாயகம் மறைவுக்கு, தங்களது இரங்கல் செய்தியை  வெளியிட்டு வருகின்றனர். இவரது இறப்பு குறித்து பாடகர் வேல்முருகன்  கூறுகையில், "இசை உலகத்திற்கு இவரது மறைவு பேரிழப்பு, கடந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐயா இறந்தது இன்றுவரை யாராலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இந்த ஆண்டு இப்படி ஒரு அதிர்ச்சியான தகவலை கேட்டவுடன் ரொம்ப வேதனையாக இருக்கிறது" என்று தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

பாடகர் மனோ

Singers Shared emotional about Manikka Vinayagam Demise

பாடகர் மாணிக்க விநாயகம் இறப்பு குறித்து, " பாடகர் மனோ வெளியிட்டுள்ள வீடியோவில், " பல பக்தி பாடல்களை பாடிய அண்ணன் பாசத்திற்குரிய மாணிக்க விநாயகம் மறைவு தவிர்க்க முடியாத மிகப்பெரிய பேரிழப்பு, அவர் ஒரு தங்கமான மனிதர்" என்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Singers Shared emotional about Manikka Vinayagam Demise

People looking for online information on மாணிக்க விநாயகம், Manikka Vinayagam, Singer, Velmurugan will find this news story useful.