ஸ்ரேயா கோஷலின் குரலைக்கேட்டு காலில் விழுந்து வணங்கிய மூதாட்டி – வைரல் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்6 வயது முதலே கர்நாடக இசையை பயின்ற ஸ்ரேயா கோஷல் 2002ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பாலிவுட் படமான 'தேவதாஸ்' மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழ் சினிமாவில் தடம் பதித்த அவர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் உட்பட தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி உள்ளார்.

’சில்லுன்னு ஒரு காதல்’, ‘நான் கடவுள்’, ‘பருத்தி வீரன்’, ‘வெயில்’, ’வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’, ’எதிர் நீச்சல்’ ஆகிய ஏராளமான படங்களில் பாடிய அவர் தேசிய விருதுகளையும், ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு மூதாட்டி ஒருவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அடுத்த விநாடியே மூதாட்டி ஸ்ரேயாவின் கால்களில் விழுந்ததால் அவர் அதிர்ச்சியில் பின்வாங்கினார். பின்னர் அந்த மூதாட்டியை அணைத்து ஸ்ரேயா கோஷல் நன்றி செலுத்தினார். ஸ்ரேயா கோஷலின் இசை மேதமைக்கு கிடைத்த இந்த மரியாதையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
When an old man touches @shreyaghoshal's feet and when she hugs him tightly. #HeartTouchingMoment 😍 pic.twitter.com/oKZVkzwH6W
— SGian Nisha💖Shreya(Pari 😘) #TeamShreya (@nimasha4sg) January 27, 2020