asuran US others

பழம்பெரும் பாலிவுட் நடிகர் விஜூ கோட்டே காலமானார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழம்பெரும் பாலிவுட் நடிகரான விஜூ கோட்டே(77) உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார்.

Sholay star Veteran actor Viju Khote passes away at 77

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான அமிதாப் பச்சனின் ‘ஷோலே’ திரைப்படத்தில் காளியா கேரக்டரில் நடித்தவர் விஜூ கோட்டே. நாடக நடிகரான விஜூ, கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் தன் உயிர் பிரிவதை விஜூ விரும்பாததால், அவர் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, இன்று (செப்.30) காலை 6.55 மணியளவில் உறக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

இவர், கயாமத் சே கயாமத் டக் (qayamat se qayamat tak), வெண்டிலேட்டர், கித்னே ஆத் மே, டு சர்கார் (Do sarkar) ஆகியவை விஜூ கோட்டே நடித்த திரைப்படங்களில் நல்ல வரவேற்பை பெற்றவை ஆகும்.

விஜூ கோட்டேவின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச்சடங்கு சந்தன் வாடியில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.