மிரட்டலான நடிப்பு… மறக்க முடியாத வேடங்கள்… சலீம் கௌஸ் மரணம்… சோகத்தில் திரையுலகம்!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பல முக்கியமான வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சலீம் கௌஸ்.
Also Read | Birthday baby சமந்தாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபலங்கள்… வைரலாகும் insta stories!
சலீம் கௌஸ்…
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் சலீம் கௌஸ். மேடை நாடகங்களில் நடிகராகவும், இயக்குனராகவும் தனது கலை வாழ்க்கையை ஆரம்பித்த இவர் முதலில் இந்தி படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் தமிழில் இவர் கமல்- பிரபு நடித்த வெற்றி விழா படத்தில் ஜிந்தா என்ற வேடத்தில் நடித்தது திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் இயக்குனர் பிரதாப் போத்தனும் இவரும் நெருங்கிய நண்பர்கள்.
மேடை நாடகங்களும், தொலைக்காட்சி தொடர்களும்…
வெற்றி விழா படத்துக்குப் பிறகு சின்னக்கவுண்டர், திருடா திருடா, செந்தமிழ்ப் பாட்டு, தர்மசீலன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாக்கள் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றிலும் ராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட வேடங்களில் நடித்து பாராட்டுகளைக் குவித்தவர். நடிப்பு மட்டும் இல்லாமல் சில படங்களுக்கு இவர் பின்னணிக் குரலும் கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 70.
ஜிந்தாவின் கோர்ட்டில்…
மேடை நாடகத்தில் இருந்து வந்ததால் வழக்கமான வில்லன்கள் போல இல்லாமல் underplay வகையிலான நடிப்பை வெளிப்படுத்துபவர் சலீம் கௌஸ். இவரின் மிரட்டலான குரலும் இவருக்கு மிகப்பெரிய பாஸிட்டிவ் அம்சமாக அமைந்தது. குறிப்பாக வெற்றி விழா படத்தில் “என்னுடைய கோர்ட்டில் தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மன்னிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை” என்ற அவரின் வசனம் இன்றளவும் நினைவு கூறப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.
வேதநாயகம்னா பயம்…
அந்த படத்தில் இவருக்குக் கிடைத்த அங்கீகாரத்தைத் தொடர்ந்து தமிழில் பல அடுத்தத்து வேடங்கள் கிடைத்தன. பெரும்பாலும் அவை வில்லன் வேடங்களாகவே அமைந்தன. அவரும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் வித்தியாசமான நடிப்பை வழங்கினார். இவரின் கடைசி தமிழ் படமாக விஜய்யின் வேட்டைக்காரன் அமைந்தது. அந்த படத்தில் வேதநாயகம் எனும் ரௌடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார். அந்த படத்தில் அவர் பேசும் ‘வேதநாயகம்னா பயம்’ என்ற வசனம் பிரபலமானது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மிரட்டலான நடிப்பு… மறக்க முடியாத வேடங்கள்… சலீம் கௌஸ் மரணம்… சோகத்தில் திரையுலகம்! வீடியோ