'மெட்டி ஒலி' விஜி மரணம்!! அஞ்சலி செலுத்தும்போது கலங்கிய சின்னத்திரை நடிகர்கள்!
முகப்பு > சினிமா செய்திகள்பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒளிபரப்பான இந்த மெட்டி ஒலி சீரியல் மெகாஹிட் அடித்தது. இந்த சீரியலை திருமுருகன் இயக்கியிருந்தார்.

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் மிக முக்கியமான சீரியல்களுள் ஒன்றான இந்த 'மெட்டி ஒலி' சீரியலில் விஜி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் உமா மகேஷ்வரி.
தற்போது 40 வயதான உமா மகேஷ்வரி, சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து அவருக்கு அவருடன் நடித்த சக நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகர் சேத்தன் மற்றும் காயத்ரி சாஸ்திரி (சரோ), வனஜா (லீலா) ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து சீரியல் நடிகர்கள் லதா, ஜீவா, ரேவதி, ரிஷி பலரும் அஞ்சலி செலுத்த வந்தவண்ணம் இருந்தனர். மெட்டி ஒலியில் லீலா கேரக்டரில் நடித்த வனஜா உடைந்து அழும் காட்சிகளையும் காண முடிகிறது.
அண்மைக்காலமாக திரைத்துறையில் பலருடைய உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சின்னத்திரை சீரியல் நடிகை 'மெட்டி ஒலி' உமா மகேஷ்வரி காலமாகிவிட்டார் என்கிற செய்தி, சின்னத்திரை உலகில் மீளா சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
'மெட்டி ஒலி' விஜி மரணம்!! அஞ்சலி செலுத்தும்போது கலங்கிய சின்னத்திரை நடிகர்கள்! வீடியோ