IKK Others
MKS Others
www.garudabazaar.com

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சதுரங்க வேட்டை - 2’ .. வெளியானது அதிகாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீண்ட நாட்களாக திரைக்கு வர காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை- 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தற்போது உறுதியாகியுள்ளதுடன், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sathuranga Vettai 2 world wide release official announcement

ONSKY Technology PVT. LTD நிறுவனத்தின் தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் மூலம் இப்படத்தின் வெளியீடு உறுதியாகியுள்ளது. இவர் தான், ‘சதுரங்க வேட்டை’ படத்தின் தொடர்வரிசைப் படமான  ‘சதுரங்க வேட்டை- 2’ படத்தைக் காண ஆவலுடன் இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியைக் கொண்டு வந்துள்ளார்.

ஆம், அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்துள்ள சதுரங்க வேட்டை - 2 படத்தின் உரிமையை தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் கைப்பற்றியுள்ளார். மேலும் இப்படத்தில் அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷாவுடன், பிரகாஷ் ராஜ், , ராதா ரவி, நாசர், சாந்தினி, ஸ்ரீமன், மனோபாலா, குமரவேல், இ.ராமதாஸ் மற்றும் பல தமிழ் சினிமா முன்னணி நட்சத்திர நடிகர்கள்  சதுரங்க வேட்டை 2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

Sathuranga Vettai 2 world wide release official announcement

இன்றைய திரையுலகின் முதன்மை இயக்குநர்களுள் ஒருவராக உருவெடுத்துள்ளார் இயக்குநர் H.வினோத். கர்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை இயக்கிய  H.வினோத், பின்னர் அஜீத் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கி வெற்றிகண்டார். அதனைத் தொடர்ந்து தற்போது அஜீத் நடிப்பில் வலிமை திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வரவிருப்பதால் ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Sathuranga Vettai 2 world wide release official announcement

முன்னதாக பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி (எ) நட்ராஜ் நடிப்பில், H.வினோத் எழுதி இயக்கிய முதல் திரைப்படம் சதுரங்க வேட்டை. இந்த படம் உண்டுபண்ணிய அதிர்வு பெரும் டிரெண்டாக மாறியது. இந்நிலையில்  H.வினோத் எழுதி, NV நிர்மல் குமார் (விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ புகழ்) இயக்கிய சதுரங்க வேட்டை - 2 படத்தை,  தயாரிப்பாளர் மனோபாலாவின் Picture House and Cinema city நிறுவனம் தயாரித்துள்ளது.

Sathuranga Vettai 2 world wide release official announcement

இந்நிலையில் ONSKY Technology PVT. LTD நிறுவனத்தின் தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் வெளியிட, வருகின்ற ஜனவரி மாதம் உலகம் முழுதும் திரையரங்குகளில் ‘சதுரங்க வேட்டை- 2’ வெளியாகிறது. தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் மிகச்சமீபத்தில்தான் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். அவரது முதல் தயாரிப்பான “2030”, தமிழ் திரையுலகில்  முதல் முறையாக ஃப்ளாஷ் ஃபார்வர்டு வகை திரைப்படமாக, விறுவிறுப்பான வேகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து ONSKY Technology PVT. LTD நிறுவனர் முத்து சம்பந்தம் கூறும்போது, “சதுரங்க வேட்டை திரைப்படம் இந்திய திரைத்துறையில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று. இதன் இரண்டாம் பாகம் சதுரங்க வேட்டை 2 வெளிவருவது ​​மிகமிக மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் காட்சி துணுக்குகளை கண்டபிறகு, என்னுள் மிகப்பெரும் ஆர்வம் குடிகொண்டது.

Sathuranga Vettai 2 world wide release official announcement

சதுரங்க வேட்டை 2 படத்தை எங்கள் நிறுவனம் மூலம் வெளியிட  முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மனோபாலா சார், Cinema city கங்காதரன் மற்றும் படம் வெளியாவதைப் பார்க்க  ஆர்வமாக இருந்த பல உன்னத உள்ளங்களுக்கு நன்றி. திரு அரவிந்த் சாமி அவர்களுக்கு அவர் கொடுக்கும் ஒத்துழைப்புக்கு கோடானு கோடி நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sathuranga Vettai 2 world wide release official announcement

People looking for online information on Arvind Swami, H Vinoth, H.Vinoth, Mano Bala, Muthu Sammantham, ONSKY, Saleem, Sathuranga Vettai, Sathuranga Vettai 2, Trisha, Valimai will find this news story useful.