விஜய் ஆண்டனி நடித்த 'சலீம்' படத்தை இயக்கியவர் என்.வி.நிர்மல் குமார். இவர் தற்போது சசிக்குமார் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கிவருகிறார்.

இந்த படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பாக பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார். இந்த படத்தில் பிரபல நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் இரண்டாம் கட்டப்பிடிப்பு மும்பையில் ஜீன் 6 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. அங்கு மொத்தம் 25 நாட்கள் நடைபெறவிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த 'பேட்ட' திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.